பல் குத்தும் குச்சியில் தாஜ்மஹால், பைசா கோபுரம்? இளைஞரின் அசத்து படைப்பு!

  • IndiaGlitz, [Saturday,April 17 2021]

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பல் குத்தும் குச்சிகளை வைத்துக் கொண்டு பல அற்புதமான கலைப்

படைப்புகளை தத்ரூபமாக உருவாக்கி வருகிறார். இவரது படைப்பை பார்த்து பலரும் அந்த இளைஞருக்குப் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

பழவேற்காடு அடுத்த நடுவூர் மாதா குப்பம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் பினு சாஜன். பி.எஸ்.சி படித்த இவர் கொரோனா நேரத்தில் வீட்டிலேயே இருந்து அற்புதமான கலைப் படைப்புகளை உருவாக்கி வருகிறார். அதிலும் 0.3 செ.மீ அளவிலான பல் குத்தும் குச்சிகளை வைத்துக் கொண்டு உலக அதிசயமான தாஜ்மஹால், பைசா கோபுரம், பழைய காலத்து சைக்கிள், பழைய நீராவி என்ஜின், டச்சுக் காலத்து கப்பல்கள் போன்றவற்றையும் தத்ரூபமாக உருவாக்கி உள்ளார்.

இவரது படைப்பைப் பார்த்த பலரும் வியந்து போய் அதை வாங்கிச் செல்வதாகக் கூறிய இளைஞர் பினு சாஜன் இந்தப் பொருட்களை விற்பனை என்ற அளவில் இல்லாமல் மாணவர்களுக்கு பல அற்புதமான கட்டிக்கலை தொழில் நுட்பங்களை சொல்லிக் கொடுப்பதற்கு பயன்படுத்தப் போவதாகத் தெரிவித்து உள்ளார். மேலும் இதுபோன்ற கலை நுட்பங்களை மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்கவும் தனது படைப்பு உதவியாக இருக்கும் எனவும் இளைஞர் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

More News

நடிகர் சோனுசூட் கொரோனாவால் பாதிப்பு: ஆனாலும் உதவிகள் தொடரும் என உறுதி!

பிரபல நடிகர் சோனு சூட், தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறியிருந்தாலும், மக்களுக்கு செய்யும் உதவி தொடரும் என அவர் உறுதியளித்துள்ளார்.

நடிகர் விவேக் செய்த கடைசி சத்தியம்! அவரே வெளியிட வீடியோ

நடிகர் விவேக் செய்த கடைசி சத்தியம் குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோவில் அவர் கூறியபோது 'திருப்பத்தூர் கல்லூரி

விவேக்கின் செயல் குறித்து மறைந்த நடிகர் குமரிமுத்து கூறியது: வீடியோ

மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் குறித்து மறைந்த நகைச்சுவை நடிகர் குமரிமுத்து அவர்கள் கூறிய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது 

மனம் ஏனோ ஏற்க மறுக்கிறது… நடிகர் விவேக் மறைவு குறித்து கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்!

தமிழ் சினிமா உலகில் மங்காத புகழைப் பெற்றவர் நகைச்சுவை நடிகர் விவேக்.

இன்று மாலையளவில் மறைந்த நடிகர் விவேக்கின் உடல் தகனம்...!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் நகைச்சுவை நடிகர் விவேக்.அண்மையில் ஓமந்தூர் அரசு மருத்துவமனையில்