பல் குத்தும் குச்சியில் தாஜ்மஹால், பைசா கோபுரம்? இளைஞரின் அசத்து படைப்பு!
- IndiaGlitz, [Saturday,April 17 2021]
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பல் குத்தும் குச்சிகளை வைத்துக் கொண்டு பல அற்புதமான கலைப்
படைப்புகளை தத்ரூபமாக உருவாக்கி வருகிறார். இவரது படைப்பை பார்த்து பலரும் அந்த இளைஞருக்குப் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
பழவேற்காடு அடுத்த நடுவூர் மாதா குப்பம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் பினு சாஜன். பி.எஸ்.சி படித்த இவர் கொரோனா நேரத்தில் வீட்டிலேயே இருந்து அற்புதமான கலைப் படைப்புகளை உருவாக்கி வருகிறார். அதிலும் 0.3 செ.மீ அளவிலான பல் குத்தும் குச்சிகளை வைத்துக் கொண்டு உலக அதிசயமான தாஜ்மஹால், பைசா கோபுரம், பழைய காலத்து சைக்கிள், பழைய நீராவி என்ஜின், டச்சுக் காலத்து கப்பல்கள் போன்றவற்றையும் தத்ரூபமாக உருவாக்கி உள்ளார்.
இவரது படைப்பைப் பார்த்த பலரும் வியந்து போய் அதை வாங்கிச் செல்வதாகக் கூறிய இளைஞர் பினு சாஜன் இந்தப் பொருட்களை விற்பனை என்ற அளவில் இல்லாமல் மாணவர்களுக்கு பல அற்புதமான கட்டிக்கலை தொழில் நுட்பங்களை சொல்லிக் கொடுப்பதற்கு பயன்படுத்தப் போவதாகத் தெரிவித்து உள்ளார். மேலும் இதுபோன்ற கலை நுட்பங்களை மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்கவும் தனது படைப்பு உதவியாக இருக்கும் எனவும் இளைஞர் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.