சுசி கணேசன் 'திருட்டுப்பயலே 2' ஓப்பனிங் வசூல் விபரம்

  • IndiaGlitz, [Monday,December 04 2017]

சுசீந்திரன் இயக்கிய 'திருட்டுப்பயலே' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து அதன் அடுத்த பாகமான 'திருட்டுப்பயலே 2' திரைப்படம் கடந்த மாதம் 30ஆம் தேதி மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியானது. பிரசன்னா, பாபிசிம்ஹா, அமலாபால் நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் ஊடகங்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றதால் தமிழகம் முழுவதும் நல்ல ஓப்பனிங் வசூலை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

குறிப்பாக சென்னையில் கடந்த வாரயிறுதியில் இந்த படம் 17 திரையரங்குகளில் 204 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.81,72,929 வசூல் செய்துள்ளது. திரையரங்குகளில் 80% பார்வையாளர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படம் கடந்த 30ஆம் தேதியில் இருந்து டிசம்பர் 3 வரையிலான 4 நாட்களில் சென்னையில் ஒரு கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ளது. அதாவது இந்த படம் ரூ.1,02,91,682 வசூல் செய்துள்ளது என்பதே இந்த படத்தின் வரவேற்புக்கு கிடைத்த சான்றாக உள்ளது.

 

More News

சன்னிலியோன் நாயகியாக நடிக்கும் முதல் தமிழ் திரைப்படம்

பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னிலியோன் இதற்கு முன்னர் கடந்த 2014ஆம் ஆண்டு வெளிவந்த 'வடகறி' என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருந்த நிலையில் தற்போது ஒரு நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

மனுதாக்கலுக்கு முன் விஷால் செய்ய போகும் மரியாதை

நடிகர் சங்க செயலாளர் மற்றும் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார்.

விஷால் என்ன ரஜினியா? பொங்கிய தமிழருவி மணியன்

ஒருபக்கம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போர் வரட்டும் என்று அரசியலுக்கு வருவதாக பல வருடங்களாக கூறி வருகிறார். இன்னொரு பக்கம் உலக நாயகன் கமல்ஹாசன் தான் அரசியலுக்கு வந்துவிட்டதாகவே கூறி வருகிறார்.

ரஜினியின் '2.0' ரிலீஸ் எப்போது? அதிகாரபூர்வ தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்சயகுமார், எமிஜாக்சன் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் லைகா நிறுவனம் தயாரித்து வரும் திரைப்படம் '2.0

நல்லவன் எவன் வந்தாலும் நமக்கு நல்லது: விஷாலின் அரசியல் குறித்து பிரபல இயக்குனர்

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் தனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்துள்ள விஷாலுக்கு ஒருசிலரை தவிர பெரும்பாலான திரையுலகினர் ஆதரவு அளித்து வருகின்றனர்.