close
Choose your channels

மலைவாழ் மக்களுடன் தீபாவளி கொண்டாடிய திருப்பத்தூர் எஸ்பி: வைரல் புகைப்படங்கள்!

Friday, November 5, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்தியா முழுவதும் நேற்று மிகவும் சிறப்பாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில் மலை வாழ் மக்களுடன் திருப்பத்தூர் எஸ்பி டாக்டர் பாலகிருஷ்ணன் அவர்கள் தீபாவளி கொண்டாடியதன் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

தீபாவளியை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது என்பதும் குறிப்பாக சுற்றுலாத்தலங்களில் ஒன்றான ஏலகிரியில் பொதுமக்கள் கூடி தீபாவளியைக் கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திருப்பத்தூர் காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர் பாலகிருஷ்ணன் அவர்கள் தனது காவல்துறை அதிகாரிகளுடன் திருப்பத்தூரில் உள்ள ஏலகிரி மலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் மலைவாழ் மக்களின் முன்னிலையில் தீபாவளி கொண்டாடினார்.

அங்கு உள்ள முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு பட்டாசு இனிப்புகள் வழங்கி அவர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார். திருப்பத்தூர் மாவட்ட எஸ்பி டாக்டர் பாலகிருஷ்ணன் அவர்களின் திடீர் வருகையால் அந்த பகுதியில் மலைவாழ் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் தீபாவளி கொண்டாடும் போது கொரோனா விழிப்புணர்வு குறித்த செய்தியையும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஆதரவற்ற குழந்தைகளுடன் அவர் தீபாவளி கொண்டாடிய புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment