உத்தம வில்லன் லாபகரமான படமா? யூடியூப் சேனலுக்கு லிங்குசாமியின் நிறுவனம் கண்டனம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் ’உத்தம வில்லன்’ திரைப்படம் தங்கள் நிறுவனத்திற்கு மிகப்பெரிய நஷ்டத்தை கொடுத்த படம் என்றும் இந்த படம் லாபகரமான படம் என்று யூடியூப் சேனல் கூறியதற்கு கண்டனம் தெரிவித்து கொள்வதாகவும் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
உலக திரை ரசிகர்களுக்கு அன்பான வணக்கம்,
தீபாவளி, பையா, வேட்டை, இவன் வேற மாதிரி, வழக்கு எண் 18/9, கும்கி. கோலிசோடா, மஞ்சப்பை, சதுரங்க வேட்டை . ரஜினிமுருகன் போன்ற தரமான மிகப்பெரிய வெற்றி படங்களையும், தேசிய விருதுகள் மற்றும் தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகளையும் பெற்ற படங்களை தயாரித்து வெளியிட்ட எங்கள் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தான்
பத்மஸ்ரீ திரு கமலஹாசன் அவர்களை வைத்து முதல் பிரதி அடிப்படையில் தயாரித்த திரைப்படமான “உத்தம வில்லன்" எங்கள் நிறுவனத்திற்கு மிகப்பெரிய பொருளாதார நஷ்டத்தையும், நிதி நெருக்கடியையும், ஏற்படுத்திய படமாகும். இது திரு.கமலஹாசன் அவர்களுக்கும் நன்றாகவே தெரியும்.
"உத்தம வில்லன்" திரைப்படத்தின் மிகப்பெரிய நஷ்டத்தை ஈடுகட்டுவதற்காக திரு.கமல்ஹாசன் அவர்களும் அவரது சகோதரர் அமரர் திரு.சந்திரஹாசன் அவர்களும் எங்கள் நிறுவனத்திற்கு மீண்டும் ஒரு படம் நடித்து தயாரித்து தருவதாக எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்துள்ளனர்.
அதற்குண்டான வேலைகளில் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் வேளையில் சமூக வலைத்தளமான "வலை பேச்சு" என்கிற யூடியூப் சேனலில் உத்தம வில்லன் மிகப்பெரிய லாபகரமான படம் என்று இயக்குனர் திரு லிங்குசாமி கூறியதாக 17-04-2024 அன்று தவறான தகவல்களை கூறியுள்ளனர் . இது முற்றிலும் கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற தவறான பொய்யான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com