என் பையன் அப்பாவி: திருநாவுக்கரசு தாயார் பொதுமக்களிடம் வாக்குவாதம்
Send us your feedback to audioarticles@vaarta.com
சமூக வலைத்தளங்கள் மூலம் 100க்கும் மேற்பட்ட அப்பாவி இளம்பெண்களை சீரழித்து, ஆபாச வீடியோ எடுத்து மிரட்டியவர்களில் ஒருவனான திருநாவுக்கரசுவை அரபு நாடுகளில் கொடுப்பது போன்ற கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என ஒட்டுமொத்த தமிழகமே கொந்தளித்து வருகிறது.
இந்த நிலையில் திருநாவுக்கரசுவின் தாயார் பொதுமக்களிடம் வாக்குவாதம் செய்யும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் தனது மகன் திருநாவுக்கரசு அப்பாவி என்றும், அவர் எந்த குற்றத்தையும் செய்யாதவர் என்றும், அவர் மீது வீண்பழி சுமத்தி கூட்டமாக சேர்ந்து அடித்து காய்ப்படுத்தியதாகவும், தனது மகனுக்கு ஒருவாரம் தான் சிகிச்சை அளித்ததாகவும் கூறியுள்ளார்.
உங்கள் பையன் செய்தத கொடூர குற்றம், இதே வேறு மாநிலமாக இருந்திருந்தால் உங்கள் பையனின் நிலைமையே வேறாக இருந்திருக்கும் என்றும் இப்படிப்பட்ட பிள்ளையை பெற்ற நீங்கள் வெட்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் கூறியபோதும் அவர்களிடம் தொடர்ந்து தனது மகன் திருநாவுக்கரசு நிரபராதி என்று அந்த பெண் வாக்குவாதம் செய்தார்.
இந்த நிலையில் திருநாவுக்கரசு தாயார் தனது மகனுக்காக தாக்கல் செய்த ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பையன ரொம்ப நம்புது போல !டிபிக்கல் கொங்கு மதர் https://t.co/ttFL8r8OEU
— இஸ்பேட் சேட்டும் இதய சேட்டியும் (@SettuOfficial) March 12, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com