என் பையன் அப்பாவி: திருநாவுக்கரசு தாயார் பொதுமக்களிடம் வாக்குவாதம்

சமூக வலைத்தளங்கள் மூலம் 100க்கும் மேற்பட்ட அப்பாவி இளம்பெண்களை சீரழித்து, ஆபாச வீடியோ எடுத்து மிரட்டியவர்களில் ஒருவனான திருநாவுக்கரசுவை அரபு நாடுகளில் கொடுப்பது போன்ற கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என ஒட்டுமொத்த தமிழகமே கொந்தளித்து வருகிறது.

இந்த நிலையில் திருநாவுக்கரசுவின் தாயார் பொதுமக்களிடம் வாக்குவாதம் செய்யும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் தனது மகன் திருநாவுக்கரசு அப்பாவி என்றும், அவர் எந்த குற்றத்தையும் செய்யாதவர் என்றும், அவர் மீது வீண்பழி சுமத்தி கூட்டமாக சேர்ந்து அடித்து காய்ப்படுத்தியதாகவும், தனது மகனுக்கு ஒருவாரம் தான் சிகிச்சை அளித்ததாகவும் கூறியுள்ளார். 

உங்கள் பையன் செய்தத கொடூர குற்றம், இதே வேறு மாநிலமாக இருந்திருந்தால் உங்கள் பையனின் நிலைமையே வேறாக இருந்திருக்கும் என்றும் இப்படிப்பட்ட பிள்ளையை பெற்ற நீங்கள் வெட்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் கூறியபோதும் அவர்களிடம் தொடர்ந்து தனது மகன் திருநாவுக்கரசு நிரபராதி என்று அந்த பெண் வாக்குவாதம் செய்தார். 

இந்த நிலையில் திருநாவுக்கரசு தாயார் தனது மகனுக்காக தாக்கல் செய்த ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

சிவகார்த்திகேயன் - பிஎஸ் மித்ரன் பட டைட்டில் குறித்த தகவல்

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் ராஜேஷ் எம் இயக்கிய 'மிஸ்டர் லோக்கல்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மே 1 என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்

நிர்பயாவுக்கு கொடுத்த முக்கியத்துவம் தமிழக பெண்களுக்கு கொடுக்காதது ஏன்? நீதிபதிகள் வேதனை 

டெல்லியில் மருத்துவக்கல்லூரி மாணவி நிர்பயா பேருந்து ஒன்றில் ஐவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டபோது நாடே கொதித்தெழுந்தது.

சிவகார்த்திகேயன் அடுத்த படத்திற்கு இசையமைக்கும் இளம் இசையமைப்பாளர்.

சிவகார்த்திகேயன் தயாரித்த 'கனா' மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் அவருடைய அடுத்த தயாரிப்பு படத்தில்  புரொடக்சன்ஸ் "தயாரிப்பு எண் 2" படத்தில்

பொள்ளாட்சி பாலியல் வழக்கில் திருநாவுக்கரசுக்கு ஜாமீனா? நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தமிழகத்தையே உலுக்கி வரும் பொள்ளாட்சி பாலியல் வழக்கில் கைதான திருநாவுக்கரசு, சபரீசன் உள்பட 4 பேர்களுக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும்

தேர்தல் ஆணையத்திற்கு உதவி செய்த விஜய்சேதுபதி!

தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும்