கமல், ரஜினி அரசியலை மறைமுகமாக தாக்கும் திருமாவளவன்
- IndiaGlitz, [Sunday,July 22 2018]
கோலிவுட் திரையுலகில் இருந்து ஒரே நேரத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகிய இருவரும் தமிழக அரசியலில் குதித்துள்ளனர். கமல்ஹாசன் அரசியல் கட்சியை தொடங்கி களத்தில் இறங்கிவிட்டார். ரஜினிகாந்த் இன்னும் அரசியல் கட்சி அறிவிப்பை தெரிவிக்கவில்லை என்றாலும் வலுவான அடித்தளத்தை ஏற்படுத்தி வருகிறார். இந்த நிலையில் நடிகர்களால் இனிமேல் அரசியலில் வெற்றி பெற முடியாது என விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார். அவர் கூறியதாவது:
55, 60 வயது வரை சினிமாவில் ஆடிப்பாடி, டூயட் பாடி எப்படியெல்லாம் சொகுசாக இருக்க வேண்டுமோ, அவ்வாறு சொகுசாக இருந்துவிட்டு, தற்போது அம்மா இல்லை, கருணாநிதி முதுமையில் இருக்கின்றார் என்பதால் வெற்றிடத்தை நிரப்பலாம் என்று ஒருசிலர் அரசியலுக்கு வருகின்றார்கள். இவர்கள், தங்களுக்கு முன்னோடியாக எம்ஜிஆரையும் ஜெயலலிதாவை நினைத்து கொண்டு அரசியலில் குதித்துள்ளனர். ஆனால் மக்கள் விழிப்புடன் இருப்பதால் இனிமேல் எந்த நடிகரும் அரசியலில் வெற்றி பெற முடியாது என்று பேசியுள்ளார்.
கடந்த பல வருடங்களாக அரசியல் கட்சி நடத்தி கொண்டிருக்கும் ஒருசிலர் இன்னும் ஒரு எம்.எல்.ஏ, எம்பி பதவியை பிடிக்க முடியாத நிலையில் கமல், ரஜினியை மக்கள் ஆதரிக்கின்றார்களா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.