ரஞ்சித்தின் யோசனையை ஏற்றால் தனிமைப்படுத்தப்படுவோம்: திருமாவளவன் எச்சரிக்கை

  • IndiaGlitz, [Saturday,December 08 2018]

இயக்குனர் ரஞ்சித்தின் மேடை பேச்சுகளிலும் அவர் இயக்கும் படங்களிலும் ஜாதி குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கள் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. ஜாதியை ஒழிக்க வேண்டும் என்று பல மேடைகளில் பேசிய ரஞ்சித் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, 'தலித் கட்சி வேட்பாளர்களுக்கே தலித்துகள் ஓட்டு போட வேண்டும்' என்று ஜாதியை முன்னிறுத்தி பேசியது முரண்பாடுகளின் மொத்த உருவமாக பார்க்கப்பட்டது.

இயக்குனர் ரஞ்சித்தின் கருத்துக்கு திரையுலகினர்களும் அரசியல் கட்சி தலைவர்களும் பல்வேறு கருத்துக்களை கூறி வரும் நிலையில் இதுகுறித்து விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியதாவது:

தேர்தலை அரசியலாக மட்டுமே அணுக முடியும் என்றும், சாதி ரீதியாக அணுக முடியாது என்றும், இயக்குநர் ரஞ்சித்தின் யோசனையை ஏற்றால் தனிமைப்படுத்தப்படுவோம் என்றும் எச்சரித்துள்ளார்.