தவறெனில் வலியதும் வீழும்.. சரியெனின் எளியதும் வாழும்.. திரு மாணிக்கம் டீசர்..!

  • IndiaGlitz, [Thursday,August 01 2024]

பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் சமுத்திரக்கனி நடித்த ’திரு மாணிக்கம்’ என்ற திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டீசர் சற்று முன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சமுத்திரகனி தனது மனைவி குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்த நிலையில் திடீரென அவருக்கு ஒரு சிக்கல் ஏற்பட்டதை அடுத்து அவர் போலீசுக்கு பயந்து காட்டுப்பகுதியில் பதுங்கி இருக்கிறார். அவரை பிடிக்க போலீஸ் படை சுற்றியுள்ள நிலையில் தான் அவர் எடுக்கும் ஒரு அதிரடி முடிவு திருப்புமுனையை ஏற்படுத்தி இருக்கிறது.

சமுத்திரக்கனி, பாரதிராஜா, அனன்யா, தம்பி ராமையா, இளவரசு, நாசர், சின்னி ஜெயந்த், வடிவுக்கரசி, ஸ்ரீமான் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை நந்தா பெரியசாமி இயக்கி உள்ளார்.

விஷால் சந்திரசேகர் இசையில், சுகுமார் ஒளிப்பதிவில், குணா படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

புதிய டிவி சீரியலில் இணையும் நிஜ தம்பதிகள்.. ரசிகர்கள் வாழ்த்து..!

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சீரியலில் ஜோடியாக நடித்து அதன் பின் காதலித்து திருமணம் செய்து கொண்ட தம்பதி மீண்டும் ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

'கோட்' 3வது சிங்கிள் பாடல் எப்போது? அதிகாரபூர்வமாக அறிவித்த ஏஜிஎஸ்..!

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'கோட்' திரைப்படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதியை ஏஜிஎஸ் நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

திரையுலக நட்சத்திரம் அனுமோகனின் ஆன்மீக பயணம்

பிரபல திரைப்பட நடிகர் அனுமோகன் அவர்கள், ஆன்மீகக்ளிட்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தனது ஆன்மீக பயணம் மற்றும் நம்பிக்கைகள் குறித்து பகிர்ந்துள்ளார்.

வயநாடு செய்திகள் கேட்க கேட்க மனசு பதறுது.. நிலச்சரிவு குறித்து நடிகர் சூரியின் பதிவு..!

வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது இரங்கலை நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.

வயநாடு நிலச்சரிவு: சூர்யா, கார்த்தி, ஜோதிகா சேர்ந்து கொடுத்த பெரும் தொகை..!

வயநாடு அருகே ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர்கள், தொழில் அதிபர்கள் நிதியுதவி செய்து வரும் நிலையில் நடிகர்கள் சூர்யா. கார்த்தி மற்றும் நடிகை ஜோதிகா