கேரளத்தில் திருக்குறளை போதித்தவர்....! சிவானந்தர் காலமானார்...!
Send us your feedback to audioarticles@vaarta.com
திருக்குறள்கள் மற்றும் திருவள்ளுவர் மீது கொண்ட ஈர்ப்பு காரணமாக, கேரளாவில் திருக்குறளை போதித்து வந்த சிவானந்தர் உடல்நலக்குறைபாடு காரணமாக (9.8.2021) நேற்றிரவு உயிரிழந்தார்.
கேரள மாநிலத்தில், எர்ணாகுளம் மாவட்டத்தில், பிரவம் என்ற ஊரில் பிறந்தவர் தான் சிவானந்தர். கடந்த 1946-ஆம் ஆண்டு கொச்சான் – பொலியாள் தம்பதிக்கு 12-ஆவது மகனாக இவர் பிறந்துள்ளார். தன்னுடைய சிறுவயதில் இருந்தே திருக்குறளின் மேல் ஆர்வம் கொண்ட சிவானந்தர், அதன் வாழ்வியல் நெறிமுறைகளை கேரள மக்களிடம் எடுத்துரைப்பதையே முழுநேர பணியாக வைத்திருந்தார். இவரின் மனைவியாரும் இதே பணியை செய்து மக்களிடம் நல்ல சிந்தனைகளை கூறி வந்தார். இதையடுத்து இவர்கள் இருவரும் இணைந்து இடுக்கி, கோட்டயம், எர்ணாகுளம் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் "பகவான் ஆதி திருவள்ளுர்வர் ஞானமடம்" என்ற பெயரில் மடங்களை துவங்கி திருக்குறள் நெறிகளை கூறிவந்தனர். உலகப்புகழ் பெற்ற நூலான திருக்குறளை, மலையாளம் மொழி பேசும் மக்களிடம் கொண்டு சேர்த்த பெருமை இவரையே சாரும். திருவள்ளுவருக்கான வழிபாடு நெறிமுறைகளை கேரளாவில் துவங்கி வைத்தவரும் இவரே.
இந்தநிலையில் சென்ற சில வருடங்களாக இவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். சிகிச்சைக்காக எர்ணாகுளம் அமிர்தானந்தமயி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர், சிகிச்சை பலனில்லாமல் நேற்றிரவு உயிரிழந்தார். இவர் காலமான செய்தி கேரளமக்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments