கேரளத்தில் திருக்குறளை போதித்தவர்....! சிவானந்தர் காலமானார்...!

  • IndiaGlitz, [Tuesday,August 10 2021]

திருக்குறள்கள் மற்றும் திருவள்ளுவர் மீது கொண்ட ஈர்ப்பு காரணமாக, கேரளாவில் திருக்குறளை போதித்து வந்த சிவானந்தர் உடல்நலக்குறைபாடு காரணமாக (9.8.2021) நேற்றிரவு உயிரிழந்தார்.

கேரள மாநிலத்தில், எர்ணாகுளம் மாவட்டத்தில், பிரவம் என்ற ஊரில் பிறந்தவர் தான் சிவானந்தர். கடந்த 1946-ஆம் ஆண்டு கொச்சான் – பொலியாள் தம்பதிக்கு 12-ஆவது மகனாக இவர் பிறந்துள்ளார். தன்னுடைய சிறுவயதில் இருந்தே திருக்குறளின் மேல் ஆர்வம் கொண்ட சிவானந்தர், அதன் வாழ்வியல் நெறிமுறைகளை கேரள மக்களிடம் எடுத்துரைப்பதையே முழுநேர பணியாக வைத்திருந்தார். இவரின் மனைவியாரும் இதே பணியை செய்து மக்களிடம் நல்ல சிந்தனைகளை கூறி வந்தார். இதையடுத்து இவர்கள் இருவரும் இணைந்து இடுக்கி, கோட்டயம், எர்ணாகுளம் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் பகவான் ஆதி திருவள்ளுர்வர் ஞானமடம் என்ற பெயரில் மடங்களை துவங்கி திருக்குறள் நெறிகளை கூறிவந்தனர். உலகப்புகழ் பெற்ற நூலான திருக்குறளை, மலையாளம் மொழி பேசும் மக்களிடம் கொண்டு சேர்த்த பெருமை இவரையே சாரும். திருவள்ளுவருக்கான வழிபாடு நெறிமுறைகளை கேரளாவில் துவங்கி வைத்தவரும் இவரே.

இந்தநிலையில் சென்ற சில வருடங்களாக இவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். சிகிச்சைக்காக எர்ணாகுளம் அமிர்தானந்தமயி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர், சிகிச்சை பலனில்லாமல் நேற்றிரவு உயிரிழந்தார். இவர் காலமான செய்தி கேரளமக்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

More News

படம் முழுவதும் சிங்கிள் கேரக்டர், சிங்கிள் ஷாட்: ஹன்சிகா அடுத்த படத்தின் ஆச்சரிய தகவல்

படம் முழுவதும் சிங்கிள் கேரக்டர் மற்றும் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் ஒன்றில் நடிகை ஹன்சிகா நடித்து உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

நடித்து கொண்டிருந்தபோதே மாரடைப்பால் உயிரிழந்த நடிகர்: வைரல் வீடியோ!

நடித்துக் கொண்டிருந்த போதே மாரடைப்பு காரணமாக கீழே விழுந்து உயிரிழந்த நடிகர் ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

எபோலா வரிசையில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் புது வைரஸ் பாதிப்பு… பகீர் தகவல்!

ஆப்பிரிக்க நாடுகளைப் பொறுத்தவரையில் எபோலா வைரஸ் பற்றிய பீதி இன்றைக்கு வரையிலும் நீடிக்கிறது.

எஸ்.பி.வேலுமணி வீட்டில் ஹார்ட் டிஸ்குகள், ஆவணங்கள் பறிமுதல்.....!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான 53க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தினர்

வெறும் 3 வார்த்தைக்கு 400 கோடி சம்பளமா? பிரபல நடிகர் குறித்த ஆச்சர்யத் தகவல்!

சினிமா என்பதே ஒரு கற்பனைச் சித்திரம்தான். இப்படி இருக்கும்போது கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான ஒரு ஹாலிவுட் சினிமாவிற்காக ஒரு முன்னணி நடிகர்