close
Choose your channels

இயக்குனராகும் 'திருச்சிற்றம்பலம்' பட நடிகை: முதல் பட ஹீரோ யார்?

Monday, August 29, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்த ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படத்தில் நடித்த நடிகை ஒருவர் விரைவில் இயக்குனராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் திரை உலகின் திறமையான நடிகைகளில் ஒருவர் நித்யாமேனன் என்பதும் இவர் தமிழில் ’180’ என்ற திரைப்படத்தில் அறிமுகமானார் என்பது தெரிந்ததே. அதன்பின்னர் வெப்பம், 24, ஓ காதல் கண்மணி, மெர்சல் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார் என்பது சமீபத்தில் வெளியான ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படத்தில் சோபனா என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நடிகை நித்யா மேனன் விரைவில் இயக்குனராக இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து அவரிடம் கேட்டபோது, ‘எனக்கு இயக்குனர் ஆக வேண்டும் என்ற ஆசை உள்ளது என்பது உண்மைதான். ஆனால் அதே நேரத்தில் இயக்குனர் ஆவதால் பயனுள்ளதாக இருக்குமா? என்று யோசித்து வருகிறேன். கண்டிப்பாக நான் ஒரு நாள் இயக்குனர் ஆவேன் என்று கூறினார்

மேலும் என்னிடம் 200 பேர் கதை சொன்னால் அதில் 4 அல்லது 5 கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறேன் என்றும் வழக்கமான படங்களில் நடிப்பது எனக்கு விருப்பமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே நடிகை நித்யா மேனன் ’ஸ்கைலாப்’ என்ற திரைப்படத்தை தயாரித்து உள்ள நிலையில் விரைவில் அவர் ஒரு படம் இயக்குவார் என்றும், அவரது முதல் பட ஹீரோ யார் என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருப்பதாகவும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment