ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கை : விஷால் வேட்புமனு குறித்து திருமாவளவன்

  • IndiaGlitz, [Wednesday,December 06 2017]

சென்னை ஆர்.கே.நகரில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கிய நடிகர் விஷாலின் அதிரடியை பார்த்து ஐம்பது வருட பாரம்பரிய திராவிட கட்சிகள் அதிர்ச்சி அடைந்து அவரது வேட்புமனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததில் இருந்தே விஷால் வருங்காலத்தில் ஒரு அரசியல் தலைவராக வருவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

விஷாலின் வேட்புமனு விவகாரத்தில் தேர்தல் அதிகாரி எடுத்த முடிவு சர்ச்சைக்குரிய வகையில் விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில் விஷாலின் வேட்புமனு நிராகரிப்பு ஜனநாயகத்திற்கு விரோதமான நடவடிக்கை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி தலையீடு உள்ளது என்பதற்கு விஷாலின் வேட்புமனு நிராகரிபு ஒரு சான்று என்றும், பெரும்பான்மை வாக்குகளை விஷால் பெறுவார் என ஆளுங்கட்சி நினைத்ததால் எடுக்கப்பட்ட நடவடிக்கையே இது என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் தேர்தல் நடத்தும் அலுவலர் சுதந்திரமாக செயல்படவில்லை என்றும் திருமாவளவன் குற்றஞ்சாட்டியுள்ளார்.