விஜய்க்கு பாராட்டு தெரிவித்த விசிக திருமாவளவன்.. இந்த ஒரே காரணம் தான்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் இன்று நடிகர் விஜய்க்கு தனது பாராட்டுதலை தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் தமிழகத்தில் உள்ள மாணவ மாணவிகளுக்கு இன்று பரிசுகள் சான்றிதழ்கள் வழங்கும் விழாவை நடத்தினார் என்பதும் இதற்காக அவர் தனது சொந்த காசில் ரூபாய் 2 கோடி செலவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
தமிழகம் முழுவதும் இருந்து 1500 மாணவ மாணவிகள் மற்றும் அவர்களுடைய பெற்றோரை அழைத்து விருந்து வைத்து சான்றிதழ் கொடுத்து அனுப்பி உள்ள நிகழ்வு தமிழக அரசியலையே திரும்பி பார்க்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த நிகழ்வில் பேசிய விஜய் ’காமராஜர், பெரியார், அம்பேத்கர் உள்ளிட்டோரின் புத்தகங்களை படிக்க வேண்டும் என்றும் மாணவ மாணவிகளுக்கு அறிவுரை கூறினார். இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இதுகுறித்து கூறியதாவது:
நடிகர் விஜய் அவர்களின் கல்வி தொடர்பான செயல்பாடுகள் நம்பிக்கையை தருகிறது. மாணவ- மாணவிகளுக்கு பெரும் ஊக்கத்தை தரும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அதுவும் திரு.விஜய் அவர்கள் பேசும் போது, புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர் போன்ற சமூக நீதித் தலைவர்களை படியுங்கள் என வழிகாட்டி இருப்பது பாராட்டுக்குரியது. வாழ்த்துகள்… என்று தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் அவர்களின்
— VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (@VCKofficial_) June 17, 2023
கல்வி தொடர்பான செயல்பாடுகள் நம்பிக்கையை தருகிறது.மாணவ- மாணவிகளுக்கு பெரும் ஊக்கத்தை தரும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.அதுவும் திரு.@actorvijay
அவர்கள் பேசும் போது,
புரட்சியாளர் அம்பேத்கர்,
தந்தை பெரியார்,
பெருந்தலைவர் காமராஜர் போன்ற
சமூகநீதித்… pic.twitter.com/6H4XjsQs5H
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments