பிக்பாஸ் அல்டிமேட்: வைல்ட்கார்ட் எண்ட்ரியாக இந்த நடிகையா?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் ஏற்கனவே சதீஷ் மற்றும் சுரேஷ் சக்கரவர்த்தி வைல்ட் கார்டு எண்ட்ரியாக வந்துள்ள நிலையில் இன்று மூன்றாவதாக ஒரு வைல்ட்கார்ட் எண்ட்ரி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 14 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில் சுரேஷ் சக்ரவர்த்தி, அபிநய், ஷாரிக், சுஜா ஆகியோர் இதுவரை வெளியேறி உள்ளனர் . மேலும் வனிதா இந்த நிகழ்ச்சியில் இருந்து தானாகவே வெளியேறி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த வாரம் முதல் சிம்பு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் நிலையில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் சதீஷ் வீட்டுக்குள் நுழைந்தனர். இந்த நிலையில் இந்த வாரமும் சிம்பு கலந்து கொள்ளும் நாளில் வைல்டு கார்டு எண்ட்ரி உள்ளது என்று கூறப்படுகிறது. பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான லாஸ்லியா தான் வைல்ட்கார்ட் எண்ட்ரி என்று என்று கூறப்படுகிறது .
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கவினுடன் காதல் என்ற சர்ச்சையை உருவாக்கிய லாஸ்லியா, பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் என்ன செய்யப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com