close
Choose your channels

திரைப்படம் போலவே சின்னத்திரையிலும் 3ஆம் பாகம்.. பிரபல நடிகையின் வைரல் பதிவு..!

Wednesday, October 9, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில வருடங்களாக தமிழ் சினிமாவில் இரண்டாம் பாகம், மூன்றாம் பாகம் திரைப்படங்கள் உருவாகி வருகிறது என்பதும் சமீபத்தில் கூட அரண்மனை படத்தின் நான்காம் பாகம் வெளியானது என்பது தெரிந்தது. அந்த வகையில் சின்னத்திரையிலும் பல தொடர்கள் இரண்டாம் பாகம் உருவாகி வந்த நிலையில் தற்போது பிரபலமான தொடர் ஒன்றின் மூன்றாம் பாகம் விரைவில் ஒளிபரப்பாக இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த 2017 ஆம் ஆண்டு ’ராஜா ராணி’ என்ற தொடர் தொடங்கி 2019 வரை ஒளிபரப்பானது. இந்த தொடரில் சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா ஜோடியாக நடித்திருந்த நிலையில் அவர்களது இயல்பான நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டது. அதுமட்டுமின்றி இந்த தொடர் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும்போது சஞ்சீவ் - ஆலியா மானசா காதலித்து திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து இந்த தொடரின் இரண்டாம் பாகம் உருவான நிலையில் சஞ்சீவ் இதில் நடிக்கவில்லை என்றாலும் ஆலியா மானசா தொடர்ந்து நடித்தார் என்பதும் சித்து நாயகனாக நடித்த இந்த தொடரும் நல்ல வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது’ ராஜா ராணி’ மூன்றாம் பாகம் உருவாக இருப்பதாக சஞ்சீவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஏற்கனவே ’ராஜா ராணி’ தொடரின் இரு பாகங்களை இயக்கிய பிரவீன் பென்னட் இந்த தொடரை இயக்க இருப்பதாகவும், இந்த தொடரில் மீண்டும் சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா நடிக்க உள்ளனர்.

இந்த பதிவில் “தயாராக இருங்கள், நண்பர்களே! ராஜா ராணி மூன்றாம் பாகம் விரைவில்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளதை அடுத்து ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment