மூன்றாவது முறையாக மோதும் சிவகார்த்திகேயன் - விஜய்சேதுபதி

  • IndiaGlitz, [Wednesday,August 22 2018]

எம்ஜிஆர் - சிவாஜி, கமல்-ரஜினி, அஜித்-விஜய், சிம்பு-தனுஷ் ஆகியோர் கோலிவுட் திரையுலகின் மாஸ் போட்டி நடிகர்களாக ஒவ்வொரு காலகட்டத்டில் இருந்து கொண்டிருந்த, கொண்டிருக்கும் நிலையில் சமீபகாலமாக சிவகார்த்திகேயன் - விஜய்சேதுபதியும் இந்த பட்டியலில் இணைந்துள்ளனர்.

இந்த நிலையில் வரும் செப்டம்பர் 13ஆம் தேதி சிவகார்த்திகேயனின் 'சீமராஜா' வெளியாகவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது விஜய்சேதுபதி நடித்த '96' திரைப்படமும் அதே நாளில் வெளியாகும் என தெரிகிறது

இந்த செய்தி உறுதி செய்யப்பட்டால் சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி படங்கள் மோதுவது இது மூன்றாவது முறை ஆகும். ஏற்கனவே கடந்த 2013ஆம் ஆண்டு 'எதிர்நீச்சல்' மற்றும் 'சூது கவ்வும்' படங்களும், 2016ஆம் ஆண்டு 'ரெமோ' மற்றும் 'ரெக்க' படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.