தளபதி 69' படத்தில் இன்னொரு ட்விஸ்ட்.. 3வது நாயகி குறித்த அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Thursday,October 03 2024]

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 69 வது திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கும் நிலையில், இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன என்பதை பார்த்தோம். இந்த நிலையில், இந்த படத்தில் ஏற்கனவே இரண்டு நாயகிகள் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், சற்று முன் மூன்றாவது நாயகி குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தளபதி விஜய் நடிப்பில், எச். வினோத் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாக இருக்கும் ’தளபதி 69’ திரைப்படத்தில் ஏற்கனவே பிரபல பாலிவுட் நடிகர் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமீதா பாஜு ஆகியோர் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. மேலும், சில மணிநேரங்களுக்கு முன்பு, இந்த படத்தில் இயக்குனர் கௌதம் மேனன் இணைந்தார் என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில், தற்போது ’பருத்தி வீரன்’ படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருது பெற்ற நடிகை பிரியாமணி, ’தளபதி 69’ படத்தில் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் இணையும் நட்சத்திரங்களை பார்க்கும்போது, இந்த படம் வேற லெவலில் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தில் நடிக்கும் ஐந்து நட்சத்திரங்களை அறிவிப்பு வெளியாக இருப்பதாக கூறப்பட்ட நிலையில், ஐவருமே தற்போது அறிவிக்கப்பட்டு விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், இன்னும் வேறு யாராவது ஏதாவது ட்விஸ்ட் இருக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். அதுமட்டுமின்றி, இந்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

நயன்தாரா படத்தை அடுத்து நேரடி ஓடிடிக்கு வருகிறதா கமல்ஹாசன் படம்?

நடிகை நயன்தாரா நடித்து வரும் 'டெஸ்ட்' என்ற திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்திற்கு வர இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், தற்போது கமல்ஹாசனின் அடுத்த படமும்

சமந்தா விவகாரத்தில் ஆவேசமான அமலா.. ராகுல் காந்திக்கு முக்கிய கோரிக்கை..!

சமந்தா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகை அமலா, ராகுல் காந்திக்கு கோரிக்கை விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாய் தவறி பேசிவிட்டேன்.. ஆனால் நான் சொன்னது உண்மைதான்: சமந்தா குறித்து அமைச்சர் சுரேகா..!

சமந்தா விவாகரத்து குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய தெலுங்கானா அமைச்சர் சுரேகா முன்னாள் அமைச்சர் கேடிஆர் குறித்து நான் கூறியது உண்மைதான் என்றும்

இப்போது, சரியான நேரம் வந்துவிட்டது.. அஜித் படத்தில் இணைந்ததை அறிவித்த பிரபல நடிகர்..!

அஜித் நடித்து வரும் "குட் பேட் அக்லி'  படத்தில் இணைந்துள்ளதாக பிரபல நடிகர் ஒருவர் தனது சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார்.

யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்.. 'தளபதி 69' படத்தில் இணைந்த ஸ்டைலிஷ் இயக்குனர்..!

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 69வது திரைப்படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் அறிவிப்புகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. இந்நிலையில், சற்றுமுன், இப்படத்தில்