மூன்றாவது பூகம்ப டாஸ்க்கிலும் தோல்வி.. அடுத்து நடக்கவிருக்கும் பரபரப்பான நிகழ்வுகள் என்ன?
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு மூன்று பூகம்ப டாஸ்குகளை பிக்பாஸ் கொடுத்துள்ளார். இந்த மூன்றிலும் போட்டியாளர்கள் வெற்றி பெற்றால் மட்டுமே வெளியில் இருந்து உள்ளே வரும் எக்ஸ் போட்ட்டியாளர்களை தவிர்க்க முடியும்.
ஆனால் டாஸ்க்குகளில் தோல்வி அடைந்து விட்டால் வெளியிலிருந்து உள்ளே வரும் எக்ஸ் போர்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் மீண்டும் போட்டியாளர்களாக மாறிவிடுவார்கள் என்றும் தற்போது இருக்கும் போட்டியாளர்களில் சிலர் வெளியேற்றப்படுவார்கள் என்றும் கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தோல்வி மேல் தோல்வி அடைந்து வரும் போட்டியாளர்கள் இன்று நடைபெற்ற மூன்றாவது டாஸ்க்கிலும் தோல்வியடைந்தனர். கொடுக்கப்பட்ட டாஸ்கை மாயா, ஜோவிகா, நிக்சன், ரவீனா உள்ளிட்டோர் விளையாட முடியாமல் தோல்வியடைந்ததால் அடுத்து நடக்க இருக்கும் அதிரடி நிகழ்வுகளை அவர்கள் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பிக் பாஸ் வீட்டிற்கு எக்ஸ் போட்டியாளர்களின் வருகை கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இங்கிருந்து வெளியேறுபவர்கள் யார் யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com