ஏப்ரலில் 'தெறி', மே-வில் 'கபாலி'. கலக்கும் பிரபல இசை நிறுவனம்

  • IndiaGlitz, [Saturday,May 28 2016]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கபாலி' படத்தின் டீசர் பல உலக சாதனைகளை செய்துள்ள நிலையில் இந்த படத்திற்கு இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீடு வரும் 9ஆம் தேதி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த படத்தின் பாடல்கள் உரிமையை பிரபல இசை நிறுவனமான 'திங்க் மியூசிக்' (Think Music) பெற்றுள்ளது. பல முன்னணி நிறுவனங்கள், நடிகர்கள், இயக்குனர்கள் படங்களின் பாடல்கள் உரிமைகளை தொடர்ந்து பெற்று வரும் இந்நிறுவனம் இதற்கு முன்னால் ரஜினியின் 'எந்திரன்', ரஞ்சித்தின் அட்டக்கத்தி, மெட்ராஸ் மற்றும் கலைப்புலி தாணு தயாரித்த கணிதன் மற்றும் 'தெறி' படங்களின் பாடல்கள் உரிமைகளையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏப்ரலில் 'தெறி' பாடல்களை பெற்று மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இந்நிறுவனம் மே மாதத்தில் 'கபாலி' படத்தின் உரிமையை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் பாடல்கள் நிச்சயம் ரசிகர்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.

More News

'விஜய் 60' படம் குறித்த முக்கிய தகவல்

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 60' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கியது.

'விஜய் 60'-அழகிய தமிழ்மகன். ஒரு அபூர்வ ஒற்றுமை

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 60' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் விஜய்...

'தல 57' குறித்த அறிவிப்பு

தல அஜித் நடிக்கவுள்ள அடுத்த படம் குறித்த முக்கிய தகவல்களை இன்று மாலை 05.07 மணிக்கு அறிவிக்க உள்ளதாக தயாரிப்பு நிறுவனமான...

பாலாவின் அடுத்த படத்தின் திட்டம் இதுதான்

சமீபத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜா தனது கனவுப்படமான 'குற்றப்பரம்பரை' படத்தின் பூஜையை வெற்றிகரமாக நடத்தினார்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்காக களமிறங்குகிறார் விஷால்

நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்று புதிய நிர்வாகிகளாக நாசர் தலைமையிலான இளைய தலைமுறை நிர்வாகிகள் பதவியேற்றதில் இருந்தே பல்வேறு ஆக்கபூர்வமான பணிகள் நடைபெற்று வருவதை பார்த்து வருகிறோம்...