சேப்பாக்கம் மைதானத்திற்குள் நாளை என்னென்ன கொண்டு செல்ல கூடாது?
- IndiaGlitz, [Monday,April 09 2018]
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடைபெறும் ஐபிஎல் போட்டிக்கு பெரும் கெடுபிடிகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியை நடத்தவிட மாட்டோம் என ஒருசில அரசியல் கட்சிகள் கூறியிருக்கும் நிலையில் நாளை பார்வையாளர்கள் கீழ்க்கண்ட பொருட்களை கொண்டு வரக்கூடாது என்று சேப்பாக்கம் மைதான நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
கொடிகள், பேனர்கள், கமர்ஷியல் லோகோ அடங்கிய போஸ்டர்கள், கைப்பைகள், மொபைல் போன்கள், சூட்கேஸ்கள், பேஜர்கள், ரேடியோ, டிஜிட்டல் டைரி, லேப்டாப், கம்ப்யூட்டர், டேப்ரிக்கார்டர், பைனாகுலர், ரிமோட் கண்ட்ரோலில் இயங்கும் பொருட்கள், ரிமோட் கண்ட்ரோல் கார் சாவி, வீடியோ கேமிராக்கள், ஆகியவை கொண்டு வரக்கூடாது.
மேலும் பட்டாசு, எளிதில் தீப்பற்றும் பொருட்கள், வாட்டர் ஜக், வாட்டர் பாட்டில் ,சிகரெட், பீடி, தீப்பெட்டி, லைட்டர், ரேசர், கத்தரிக்கோல், கண்ணாடி, கத்தி, பேட்டரி,ஆகியவைகள் கொண்டு வரக்கூடாது.
மேலும் உணவு மற்றும் குளிர்பானங்களுக்கும் தடை. மேலும் போட்டியை பாதிக்கும் நடவடிக்கையிலும் ஈடுபடுவோர் மீது போலீசர் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டுக்கு ஒப்புக்கொண்டு நிச்சயம் அந்த போட்டியை பார்த்துதான் ஆகணுமா? என்ற எண்ணமே இந்த எச்சரிக்கையை பார்த்தவுடன் அனைவருக்கும் தோன்றுகிறது.