சிங்கிளா நீங்க? கவலையை விடுங்க… காதலில் வெல்ல அச்சத்தலான 5 டிப்ஸ்!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆதாம், ஏவாள் காலத்தில் இருந்தே பெண்களை புரிந்துகொள்ள வேண்டும் என்று ஆண்கள் மெனக்கெடத்தான் செய்கின்றனர். ஆனால் பெண்களை புரிந்து கொண்டார்களா? அவர்களின் மனதில் நிரந்தரமாக இடம் பிடித்து விட்டார்களா? என்றால் அங்குதான் பிரச்சனையே ஆரம்பிக்கிறது. ஒரு பெண்ணை புரிந்து கொள்வது என்பது அவ்வளவு எளிதான காரியமா? என்றுதான் பலரும் கேள்வி கேட்கிறோம். ஆனால் உளவியல் அடிப்படையில் இது ரொம்ப எளிமைதான் என்கின்றனர் மருத்துவர்கள்.
அதாவது ஒரு பெண் பெரும்பாலும் ஆணைத்தான் விரும்புகிறார். அதேபோல ஒரு ஆண் ஒரு பெண்ணைத்தான் விரும்புகிறார். இந்த ஆர்வத்தில் ஒரு சதவீதம் மட்டும் மாறிப்போகலாம். ஆனால் மனிதர்கள் பெரும்பாலும் எதிர்பாலினத்தைத்தான் விரும்புகின்றனர்.
இதில் இருந்து ஒரு விஷயம் மட்டும் தெளிவாகிறது. பெண் தன்னிடம் இல்லாத எதையோ ஒன்றை அல்லது தனக்குத் தேவையான ஏதோ ஒன்றை ஒரு ஆணிடம் தேடுகிறார். அதேபோல ஒரு ஆண் தன்னுடைய பார்னரிடம் தனக்குப் பிடித்த ஏதோ ஒன்றைத் தேடுகிறார். இதை முழுமையாகப் புரிந்து கொண்டு அந்த உணர்வுக்கு மதிப்புக் கொடுத்தாலே போதுமானது என்கின்றனர்.
1.முதலில் ஒரு பெண்ணை பார்த்தவுடன் பேச வேண்டும் என நினைக்கிறீர்களா? தயக்கம் இல்லாமல் பேசுங்கள். ஆனால் ஒருபோதும் அந்தப் பெண்ணை உங்களுடைய காதலி என்றோ? திருமணம் செய்து கொண்டு உங்கள் குழந்தைகளை வளர்க்க போகிறவள் என்றோ நினைக்க வேண்டாம்.
முதலில் அந்தப் பெண்ணை ஒரு சக மனுஷியாக நினைப்பது முக்கியம். ஒரு மனுஷி என்பதைத் தாண்டித்தான் ஒரு பெண் காதலியாக முடியும். மனைவியாக முடியும். அந்த அடிப்படையில் அந்த பெண்ணிற்கு என்ன பிடிக்கும்? என்ன பிடிக்காது? அவருடைய எதிர்பார்ப்பு என்னவாக இருக்கிறது? அந்த எதிர்பார்ப்பை உங்களால் பூர்த்தி செய்ய முடியுமா? என்பதையெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
இதைவிட்டு விட்டு காதலிக்கிறேன் என்ற பேர்வழியில் சினிமாவில் வருவதைப் போல செயல்பட நினைத்தால் ஒரு பெண்ணை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாது. அதனால், எதோ ஒரு நோக்கத்தை வைத்துக்கொண்டு பேசுவதைவிடவும் இயல்பாக பேசி அணுகும்போது இருபாலினத்தவரும் எளிமையாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முடியும்.
இப்படி எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பேசும்போது ஒருவேளை ஒத்துவரவில்லை என்றால் எந்த பாதிப்பும் இல்லாமல் அவரை விட்டு விலகிவிடலாம். மேலும் இப்படி ஒரு பெண்ணை காதலியாக அணுகாமல் சக மனுஷியாக அணுகும்போது ஒரு ஆணுக்கு எந்த தயக்கமும் இருக்காது. எந்தத் தயக்கமும், பயமும் இல்லாமல் ஒரு நட்பினை வளர்த்துக் கொள்ள இந்த முறை ஆண்களுக்கு உதவியாக இருக்கும்.
2.சரி ஒரு பெண்ணை பார்த்து அவரைப் புரிந்து கொள்ள முயற்சி செய்கிறீர்கள். அடுத்து என்ன செய்வது? முதலில் உங்களுக்கு என்ன தேவை என்பதை முடிவு செய்யுங்கள். அழகு, படிப்பு, சம்பளம், வாழ்க்கை முறை, உணவு இப்படி எதோ ஒரு வகையில் உங்களுக்கு ஏதோ ஒரு தேவை இருக்கலாம். அது உங்களையும் அறியாமல் உங்கள் மனதில் ஒளிந்து கொண்டு இருக்கலாம். ஒருவேளை அப்படி இருந்தால் அந்தக் குரலுக்கு செவிசாய்த்து அதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.
இதுபோன்ற எந்த எதிர்பார்ப்புகளும் எனக்கு இல்லை. என்னை ஒரு பெண் திரும்பி பார்ப்பதே பெரிய விஷயம் என்பதுபோன்ற உணர்வுகள் உங்களுக்கு இருந்தால் அந்த உணர்வு உங்களை முதுகெலும்பில்லாத மனிதனாக மாற்றுவதற்கு சமம். ஆக இந்த உலகத்தில் இருக்கும் எல்லா மனிதர்களும் ஏதோ ஒரு வகையில் உன்னதமானவர்கள்தான். இந்த உன்னதம் என்பது நம்முடைய உணர்வில் இருந்து வர வேண்டுமே தவிர மற்றவர்கள் சொல்வதை வைத்துக் கொண்டு நம்மை நாமே தாழ்த்திக் கொள்ளக்கூடாது என்பதும் முக்கியம்.
3.அடுத்து அந்த பெண்ணிற்கு என்ன தேவை என்பதைப் புரிந்து கொள்வது உங்க விருப்பத்தை விட ரொம்ப முக்கியம். ஒரு உறவு நிலையில் நமக்கு என்ன வேண்டும் என்பதைவிட அவர்களுக்கு நாம் என்ன செய்ய போகிறோம் என்பதில்தான் வெற்றி சூத்திரமே அடங்கி இருக்கிறது.
எனவே அவர்களுடைய தேவை, பிடித்தது, பிடிக்காதது, சூழல், படிப்பு, வேலை, பணம், எதிர்காலம் என அனைத்தையும் தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது. இப்படி மற்றவர்களின் உணர்வு நிலைக்கு முக்கியத்துவம் கொடுக்கும்போது ஒருவேளை இந்த எதிர்பார்ப்பு நிறைவேறா விட்டாலும் உங்களுக்கு அந்தப் பெண்ணின் மீது இருக்கும் அக்கறை, உங்கள் உறவை கெட்டியாகப் பிடித்து வைத்திருக்கும். அதனால் ஒரு உறவில் நாம் என்ன செய்ய போகிறோம் என்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது நல்லது.
4.ஒருவருடைய பழக்க வழக்கம் என்பது அவர் வளரும் சூழலில் இருந்து வருகிறது. இந்த அடிப்படையில் உங்களுடைய காதலி உங்களைவிட மேம்பட்ட பண்புகளைக் கொண்டு இருக்கிறாரா? அதேபோல தன்னுடைய துணையும் இருக்க வேண்டும் என நினைக்கிறாரா? அப்படி நினைக்கும்போது அவருக்கு ஏற்றாற்போல உங்களுடைய பழக்க வழக்கங்களையும் நடை, உடை, குணாதசியங்களையும் மாற்றிக் கொள்வதில் எந்த தவறும் இல்லை. இதுபோன்ற மாற்றங்கள் இரண்டு பக்கங்களில் இருந்து வந்தாலும் அது நல்லதுதான்.
ஆனால் இதுபோன்ற சமயங்களில் உங்கள் சுயமரியாதை குறைந்து போய் விட்டதாக ஒருபோதும் நினைத்து விடாதீர்கள். அதாவது உங்கள் காதலி உங்களை அநாவசியமாக நினைக்கிறார். தட்டிக்கழிக்கிறார் என்பது போன்ற உணர்வுகளை நீங்களாகவே நினைத்துக் கொண்டு உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்ள வேண்டாம்.
ஒரு சில உறவுகளில் இதுபோன்ற அசம்பாவிதம் அல்ட்ராசிட்டி நடக்கத்தான் செய்யும். ஆனால் நீங்களா அதை அசிங்கம் என நினைத்தால் ஒழிய அதில் வருத்தப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்பதும் கவனிக்க வேண்டிய ஒன்று.
5. ஒரு பெண் எதிர்பார்ப்பது எல்லாம் பாதுகாப்பு, நம்பிக்கை, உற்ற துணையாக இருப்பது, ஒரு பொது இடத்திலோ அல்லது குடும்பத்திலோ பிரச்சனை வரும்போது தனக்காக நிற்பது, தன் பக்கம் உள்ள நியாயத்தை கவனித்து தனக்காக பேசுவது, தன்னுடைய வார்த்தைக்கும் உணர்வுக்கும் மதிப்பு கொடுப்பது இதுபோன்ற விஷயங்களைத்தான் உலகத்தில் உள்ள எல்லா பெண்களும் எதிர்பார்க்கின்றனர்.
இதைவிடுத்து பெண்கள் எல்லோரும் அழகான ஆண்களைத்தான் விரும்புவார்கள் என நினைப்பது படு முட்டாள்தனம். ஒரு பெண்ணிற்கு ஒரு ஆண் மதிப்பு கொடுக்கும்போது அவரின் எதிர்ப்பார்ப்பு நிறைவேறி விடுகிறது. அதேபோல ஒரு ஆண் துவண்டு போகும் சமயங்களில் தோள் கொடுக்கும் ஒரு நபராக இருப்பதோடு காதலையும் பாசத்தையும் வாரி வழங்கும்போது ஒரு ஆணின் எதிர்ப்பார்ப்பு நிறைவேறிவிடுகிறது.
இந்த எதிர்ப்பார்ப்புகளைத் தாண்டி சில சமயங்களில் நீயா? நானா? என்ற ஈகோ வந்து விடலாம். அதாவது இந்த வேலையை பெண் தான் செய்யவேண்டும், ஒரு ஆணாக இருந்து கொண்டு இதைக்கூட செய்யமாட்டியா? என்பது போன்ற பிரச்சனைகள் வரலாம். இந்த ஈகோவை ஆண், பெண் என்ற பாலின அடிப்படையில் இருந்து பார்க்காமல் தன்னுடைய துணைக்கானது என்கிற ரீதியில் அணுகினால் இதுவும் எளிதாகத் தீர்ந்துபோய் விடும்.
ஆக காதல் எனும் உறவில் ஒருவரை ஒருவர் அதிகாரம் செலுத்தாமல், மற்றவர்களுக்காக என்ற சிந்தித்தாலே அதில் ஜெயித்துவிடலாம் என்ற உளவியல் ஆலோசகர்கள் கருத்துக் கூறுகின்றனர். இந்த வழிமுறைகளைப் பின்பற்றி உங்களுடைய உறவையும் வலிமையானதாக மாற்றிவிடுங்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout