வில்லன்+நகைச்சுவை: நாகேஷின் பிடித்த படம் குறித்து விவேக்!

  • IndiaGlitz, [Sunday,September 27 2020]

தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகரும் மூன்று தலைமுறை நடிகர்களுடன் சுமார் 1000 படங்களுக்கு மேல் நடித்தவருமான நடிகர் நாகேஷின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது

உலக நாயகன் கமல்ஹாசன் உள்பட பல திரையுலக பிரபலங்கள் நாகேஷின் பெருமை குறித்து தங்களது சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான நடிகர் விவேக் தனக்கு நாகேஷின் பிடித்த படம் ’தில்லானா மோகனாம்பாள்’ என்றும் நகைச்சுவை மற்றும் வில்லன் ஆகிய இரண்டு வேடத்தையும் இணைத்து நடித்த ஒரு முக்கியமான கேரக்டரில் அந்த படத்தில் அவர் நடித்து இருப்பார் என்றும் கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

நகைச்சுவை குணச்சித்திரம் வில்லன் எல்லாம் ஏற்று செய்யக்கூடிய ஓர் அற்புதம்!! நடிகர்களில் முதலில் சிக்ஸ்பேக் கொண்டவர். Knuckle pushup செய்வார் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். எனக்கு அவர் நடித்த மிகவும் பிடித்த படம் ‘தில்லானா மோகனாம்பாள்’ என்று விவேக் குறிப்பிட்டுள்ளார்