திருடன் அனுப்பிய கொரியர்: இன்ப அதிர்ச்சியில் துணிக்கடை உரிமையாளர்
Send us your feedback to audioarticles@vaarta.com
துணிக்கடை உரிமையாளர் ஒருவரின் கைப்பையை திருடி சென்ற திருடன் கொரியர் ஒன்றை அனுப்பியுள்ளதாகவும், அந்த கொரியரை பார்த்து துணிக்கடை உரிமையாளர் இன்ப அதிர்ச்சி அடைந்த செய்தி சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகியுள்ளது
புனேவை சேர்ந்த 47 வயது பெண் சப்னாடே என்பவர் துணிக்கடை வைத்துள்ளார். இவர் சமீபத்தில் தனது காரில் கைப்பையை வைத்துவிட்டு வாக்கிங் சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது கார்க்கண்ணாடி உடைக்கப்பட்டு கைப்பையில் இருந்த பர்ஸ் திருடப்பட்டிருந்தது. அந்த பர்ஸில் ரூ.15000 பணம், டிரைவிங் லைசென்ஸ் மற்றும் வீட்டுச்சாவி இருந்துள்ளது. டிரைவிங் லைசென்ஸ் இல்லாததால் மாற்று ஏற்பாடு செய்யப்படும் வரை கார் ஓட்ட முடியாத நிலைமைக்கு சப்னாடே தள்ளப்பட்டிருந்தார்
இந்த நிலையில் அவருக்கு ஒருசில நாட்கள் கழித்து ஒரு கொரியர் வந்துள்ளது. அதில் அவருடைய டிரைவிங் லைசென்ஸ் இருந்ததை பார்த்து ஆச்சரியமடைந்தார். திருடனாக இருந்தாலும் அவனது நேர்மை குறித்து சப்னாடே பதிவு செய்துள்ள சமூகவலைத்தள கருத்து தற்போது டிரெண்டிங்கில் உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com