ஏடிஎம் மெஷினையே கயிறுக்கட்டி இழுத்துச் சென்ற பலே திருடர்கள்… அதிர்ச்சி வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
தெலுங்கானா மாநிலத்தில் கொள்ளை கும்பல் ஒன்று ஏடிஎம் மெஷினை உடைக்க முடியாமல் மெஷினையே கயிறுக்கட்டி இழுத்துச் சென்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் மெஷினில் வைக்கப்பட்டு இருந்த ரூ.30 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளது.
தெலுங்கானா மாநிலம் அடிலாபாத் மாவட்டத்தில் உள்ள ஸ்டேட் பேங்க் ஏடிஎம் ஒன்றின் முன்பு அதிகாலை 3 மணிக்கு கார் ஒன்று வருகிறது. அதில் இருந்து முழுவதுமாக உடையணிந்த 4 திருடர்கள் இறங்குகின்றனர். பின்னர் ஏடிஎம்மிற்குள் நுழைந்த அவர்கள் முதலில் ஏடிஎம்மை உடைக்க முயற்சிக்கின்றனர். ஆனால் முடியவில்லை. இதனால் கொஞ்சமும் மனம் தளராத அந்தக் கும்பல் தாங்கள் வந்த காரிலேயே கயிற்றைக் கட்டி அந்த ஏடிஎம் மெஷினை அப்படியே பிடித்து இழுக்கிறது. இதனால் ஏடிஎம் மெஷின் பிளக்க அதில் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டு அந்தக் கொள்ளை கும்பல் வேகமாக காரில் பறந்து விட்டது.
இத்தனை காட்சிகளும் ஏடிஎம்மிற்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருக்கிறது. ஆனால் ரூ.30 லட்சம் பணத்தை கொள்ளை அடித்த கும்பல் யார் என்று இதுவரை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருவதாகக் கூறப்படுகிறது. அதோடு கொள்ளை அடிக்கப்பட்ட ஏடிஎம் நிலையத்திற்கு பக்கத்திலேயே காவல் நிலையம் இருக்கிறது என்பதும் கூடுதல் தகவல். மேலும் இந்தக் கொள்ளை கும்பல் ஏடிஎம் கொள்ளைக்கு வருவதற்கு முன்பே ஒரு நகைக் கடையில் பூட்டை திறக்க முயற்சித்து இருக்கிறது. அதுவும் சிசிடிவி காட்சிகளில் பதிவாகி இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com