ஏடிஎம் மெஷினையே கயிறுக்கட்டி இழுத்துச் சென்ற பலே திருடர்கள்… அதிர்ச்சி வீடியோ!

  • IndiaGlitz, [Saturday,February 06 2021]


 

தெலுங்கானா மாநிலத்தில் கொள்ளை கும்பல் ஒன்று ஏடிஎம் மெஷினை உடைக்க முடியாமல் மெஷினையே கயிறுக்கட்டி இழுத்துச் சென்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் மெஷினில் வைக்கப்பட்டு இருந்த ரூ.30 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளது.

தெலுங்கானா மாநிலம் அடிலாபாத் மாவட்டத்தில் உள்ள ஸ்டேட் பேங்க் ஏடிஎம் ஒன்றின் முன்பு அதிகாலை 3 மணிக்கு கார் ஒன்று வருகிறது. அதில் இருந்து முழுவதுமாக உடையணிந்த 4 திருடர்கள் இறங்குகின்றனர். பின்னர் ஏடிஎம்மிற்குள் நுழைந்த அவர்கள் முதலில் ஏடிஎம்மை உடைக்க முயற்சிக்கின்றனர். ஆனால் முடியவில்லை. இதனால் கொஞ்சமும் மனம் தளராத அந்தக் கும்பல் தாங்கள் வந்த காரிலேயே கயிற்றைக் கட்டி அந்த ஏடிஎம் மெஷினை அப்படியே பிடித்து இழுக்கிறது. இதனால் ஏடிஎம் மெஷின் பிளக்க அதில் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டு அந்தக் கொள்ளை கும்பல் வேகமாக காரில் பறந்து விட்டது.

இத்தனை காட்சிகளும் ஏடிஎம்மிற்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருக்கிறது. ஆனால் ரூ.30 லட்சம் பணத்தை கொள்ளை அடித்த கும்பல் யார் என்று இதுவரை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருவதாகக் கூறப்படுகிறது. அதோடு கொள்ளை அடிக்கப்பட்ட ஏடிஎம் நிலையத்திற்கு பக்கத்திலேயே காவல் நிலையம் இருக்கிறது என்பதும் கூடுதல் தகவல். மேலும் இந்தக் கொள்ளை கும்பல் ஏடிஎம் கொள்ளைக்கு வருவதற்கு முன்பே ஒரு நகைக் கடையில் பூட்டை திறக்க முயற்சித்து இருக்கிறது. அதுவும் சிசிடிவி காட்சிகளில் பதிவாகி இருக்கிறது.

More News

பிகே-சுனில்: யார் சிறந்த ராஜதந்திரி? அரசியல் களத்தை அலசும் பிரத்யேக வீடியோ!

அந்த காலம் தொட்டு இந்த காலம் வரை அரசியல் களத்தில் ஆலோசனைக் கூறும் சாணாக்கியர்களுக்கு எப்போதும் மவுசு அதிகம்.

ரிஹானா நாட்டிற்கு இந்தியா தடுப்பூசி நன்கொடை… விவாதத்திற்கு மத்தியில் வைரலாகும் தகவல்!

பிரபல பாப் பாடகியும் நடிகையுமான ரிஹானா தற்போது அமெரிக்காவில் வாழ்ந்து வந்தாலும் அவர் மேற்கு இந்திய தீவு நாடுகளுள் ஒன்றான பார்படாஸ் என்ற நாட்டைச் சார்ந்தவர் என்பது

சச்சினைக் குறித்து இணையத்தில் வைரலாகும் ஒரு ஹேஷ்டேக்! ரசிகர்கள் யார் பக்கம்?

சமூக வலைத்தளத்தில் சச்சினுக்கு ஆதரவாக #IStandWithSachin என்ற ஹேஷ்டேக் வைரலாகி வருகிறது.

புத்துயிர் அளியுங்கள்: தனுஷ் ரசிகர்களின் திடீர் போஸ்டர்களால் பரபரப்பு!

தனுஷ் பட தயாரிப்பாளருக்கு வேண்டுகோள் விடுத்து அவரது ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காதலர் தினத்தை முன்னிட்டு விவாகரத்து இலவசம்? இப்படி ஒரு ஆஃபரா!

மாதக் கணக்கில் காதலர் தினத்திற்காக காத்திருந்து காதலை சொல்லும் இளசுகளுக்கு மத்தியில் காதலர் தினத்தை முன்னிட்டு விவாகரத்து இலவசமாகப் பெற்றுத் தரப்படும் என்றொரு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.