பலே திருடன்!! மீன்பிடி தூண்டிலை வைத்து நகைக்கடையில் திருட்டு –சிசிடி காட்சியில் பதிவானது
Send us your feedback to audioarticles@vaarta.com
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற பழமொழி நம் வழக்கில் உண்டு. எல்லா நாடுகளுக்கும் இந்தப் பழமொழி ஒத்து வரும் என்பதை ஒரு திருடர் இப்போது நிரூபித்து இருக்கிறார். ஆஸ்திரேலியா மெல்பர்ன் நகரில் ஒருவர் தன்னுடைய மீன்பிடி தூண்டிலை மட்டுமே வைத்து லாவகமாக நெக்லஸை கொள்ளை அடித்துள்ளார். அந்தக் காட்சி சிசிடி கேமராவில் பதிவாகி இருக்கிறது.
நள்ளிரவில் ஒரு மர்மநபர் மெல்பேர்ன் நகரில் உள்ள ஒரு நகைக்கடையின் ஜன்னலை முதலில் உடைக்கிறார். யாராவது பார்க்கிறார்களா என நோட்டமிட்டுக் கொண்டே மீன்பிடி தூண்டிலை வைத்து லாவகமாக நெக்லஸை எடுக்கிறார். இந்தக் காட்சிகள் அனைத்தும் பக்கத்தில் உள்ள சிசிடி கேமராவில் பதிவாகி இருக்கிறது.
சிசிடி கேமராவில் பதிவான காட்சிகளை விக்டோரியா மாகாணக் காவல் துறையினர் இணையத்தில் வெளியிட்டுள்ளனர். மேலும், அந்தக் காட்சியில் வரும் மர்மநபரைக் குறித்து தகவல் தெரிவிக்குமாறு காவல் துறை கேட்டுக்கொண்டுள்ளது என்பதும் குறிப்பிடத் தக்கது.
WATCH: Security footage shows a man using a fishing rod to remove a Versace necklace from a mannequin within the store just after 2am. pic.twitter.com/9S103jZjv4
— Victoria Police (@VictoriaPolice) March 3, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout