பலே திருடன்!! மீன்பிடி தூண்டிலை வைத்து நகைக்கடையில் திருட்டு –சிசிடி காட்சியில் பதிவானது

  • IndiaGlitz, [Saturday,March 07 2020]

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற பழமொழி நம் வழக்கில் உண்டு. எல்லா நாடுகளுக்கும் இந்தப் பழமொழி ஒத்து வரும் என்பதை ஒரு திருடர் இப்போது நிரூபித்து இருக்கிறார். ஆஸ்திரேலியா மெல்பர்ன் நகரில் ஒருவர் தன்னுடைய மீன்பிடி தூண்டிலை மட்டுமே வைத்து லாவகமாக நெக்லஸை கொள்ளை அடித்துள்ளார். அந்தக் காட்சி சிசிடி கேமராவில் பதிவாகி இருக்கிறது.

நள்ளிரவில் ஒரு மர்மநபர் மெல்பேர்ன் நகரில் உள்ள ஒரு நகைக்கடையின் ஜன்னலை முதலில் உடைக்கிறார். யாராவது பார்க்கிறார்களா என நோட்டமிட்டுக் கொண்டே மீன்பிடி தூண்டிலை வைத்து லாவகமாக நெக்லஸை எடுக்கிறார். இந்தக் காட்சிகள் அனைத்தும் பக்கத்தில் உள்ள சிசிடி கேமராவில் பதிவாகி இருக்கிறது.

சிசிடி கேமராவில் பதிவான காட்சிகளை விக்டோரியா மாகாணக் காவல் துறையினர் இணையத்தில் வெளியிட்டுள்ளனர். மேலும், அந்தக் காட்சியில் வரும் மர்மநபரைக் குறித்து தகவல் தெரிவிக்குமாறு காவல் துறை கேட்டுக்கொண்டுள்ளது என்பதும் குறிப்பிடத் தக்கது.
 

More News

துக்ளக் விழாவில் ரஜினி பேசியது குறித்த வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு

சமீபத்தில் நடைபெற்ற துக்ளக் ஐம்பதாவது ஆண்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கலந்துகொண்டு பேசியபோது அவர் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து கூறியதாக விமர்சனங்கள் எழுந்தன 

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்தை எட்டுகிறது; உலக நாடுகளின் நிலவரம்

“கோவிட் 19” எனப்படும் கொரோனா தற்போது உலகம் முழுவதும் ஒரு லட்சம் மக்களுக்கு பரவியிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுவரை சீனாவில் கொரோ

அப்பாவை விட பெரியப்பாவிடம் பாராட்டு வாங்குவது தான் கடினம் ..! ஸ்டாலின் உருக்கம்.

முப்பாலூட்டிய பேராசிரிய பெரியப்பா என தொடங்கும் அந்த பதிவு.. திராவ

க.அன்பழகன் சம்பாதித்தது இரண்டே இரண்டு தான்: ரஜினிகாந்த்

திமுகவின் பொதுச்செயலாளரும் தமிழகத்தின் பழம்பெரும் அரசியல்வாதியுமான க.அன்பழகன் இன்று அதிகாலை 1 மணிக்கு காலமானதை அடுத்து அவருக்கு அரசியல் தலைவர்கள்

இந்தியா மூன்று பெரிய ஆபத்துகளில் சிக்கி தவித்து வருகிறது!!! முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கருத்து

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் இந்தியாவின் முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் கட்டு