மனிதாபிமானம் கொண்ட திருடன்....! திருச்சியில் நடந்த அதிசயம்....!

  • IndiaGlitz, [Saturday,July 17 2021]

பெண்ணிடம் ஹேண்ட்பேக்கை திருடிச்சென்ற திருடன், போனில் பேசி கெஞ்சியதால், பொருளை திருப்பி கொடுத்த சம்பவம் திருச்சியில் அரேங்கேறியுள்ளது.

இளஞ்சியம் என்பவர் திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் பகுதியில் பகுதியில் வசித்து வருகிறார். குஜராத்தில் இருக்கும் இவரது மகள் அண்மையில் தாயை பார்க்க திருச்சி வந்துள்ளார். அங்கிருந்து எடமலைப்பட்டி புதூர் பகுதியில் உள்ள, தனது தோழியை பார்க்க, தாயும், மகளும் இருசக்கர வாகனத்தின் இரவு நேரத்தில் புறப்பட்டு சென்றுள்ளனர்.கிராப்பட்டி ரயில்வே மேம்பாலம் அருகே, 7 மணிக்கு சென்று கொண்டிருக்கும்போது, அடையாளம் தெரியாத நபர் இவர்களின் ஹேண்பேக்கை திருடிச் சென்றுவிட்டான். இவர்கள் அவனை விரட்டிச் சென்றதில், அவன் படுவேகத்தில் தப்பித்துள்ளான்.

அந்த ஹேண்ட்பேக்கில் 15,000 ரூபாயும், ஏடிஎம் கார்டுகளும், 2 செல்போன்களும் இருந்தது. இதனால் அவர்கள் எடமலைப்பட்டிபுதூர் காவல்நிலையத்தில் தகவல் கொடுத்தனர். இளஞ்சியம் மற்றும் அவர் மகளிடமிருந்து தகவல்களை வாங்கிக்கொண்ட காவல்துறையினர், காலையில் வந்து புகாரளிக்குமாறு கூறிவிட்டனர்.

வீட்டிற்கு சென்றபின் இளஞ்சியத்தின் மகள், தன்னுடைய போனுக்கு அழைத்து பேசியுள்ளார். போன் அட்டண்ட் செய்த திருடனிடம் தங்களது நிலைமையையும், போன், ஏடிஎம் கார்டை திருப்பி தருமாறும் கெஞ்சியுள்ளனர். இதனால் இரக்கமடைந்த திருடன், பேக்கை திருப்பி தர ஒத்துக்கொண்டு, சென்னை - திருச்சி பைபாஸ் சாலையில் இருக்கும் கார் ஷோரூம் அருகே வரச்சொல்லியுள்ளான். களஞ்சியம் இதுகுறித்து தனது தம்பியிடம் தகவல் தெரிவிக்க, அவர் அங்கு சென்றுள்ளார். அந்த இடத்திற்கு வந்த திருடன் ஹேண்ட்பேக்கை தூக்கி வீசிவிட்டு தப்பிச்சென்றான். அதில் பணம் மட்டும் எடுக்கப்பட்டிருக்க, 2 போன்களும், ஏடிஎம் கார்டுகளும் அப்படியே இருந்தன.