திருடலாம்னு வந்தேன் சார்.. ஆனா தூக்கம் வந்துருச்சு. திருடப்போன இடத்தில் தூங்கிய திருடன்.

  • IndiaGlitz, [Friday,December 06 2019]

விருதுநகரில் பெருமாள் கோயிலில் திருட வந்த செந்தூர்பாண்டி என்ற திருடன், மது போதையில் அங்கேயே உறங்கிவிட, அப்பகுதியில் ரோந்து சென்ற காவல்துறையினரிடம் சிக்கியுள்ள சம்பவம் நடந்துள்ளது.

விருதுநகர் ஆர்.ஆர் நகரில் அமைந்துள்ள பெருமாள் கோயில் வளாகத்தில் நேற்று இரவு ஒருவர் தூங்கிக்கொண்டிருந்தது அப்பகுதியில் ரோந்து சென்ற காவல்துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அருகில் சென்று பார்த்தபோது அவர் மதுபோதையுடன் உறங்கிக் கிடப்பதும் அவர் அருகில் டார்ச்லைட் மற்றும் இரும்புக்கம்பி இருந்ததையும் பார்த்து அவரைத் தட்டி எழுப்பி காவல்நிலையத்துக்குக் கூட்டிச் சென்றனர்.

அவரிடம் விசாரணை நடத்தியதில், கூலி வேலை செய்யும் தனக்கு போதிய வருமானம் இல்லை என்பதால், திருடத் தொடங்கியதாகவும் கடந்த 19 ஆண்டுகளாக வீடுகள், கடைகள், சிறு கோயில்களில் திருடி வருவதாகவும் சமீபத்தில் புலிகுத்தி கிராமத்தில் உள்ள சிவன் கோயிலில் உண்டியலைத் திருடிச் சென்றதாகவும் தெரிவித்தார்.மேலும், திருடிய பணத்தில் ஜாலியாக செலவு செய்து வந்ததாகவும் அடுத்து புல்லட் பைக் வாங்குவதற்குப் பணம் தேவைப்பட்டதால் பெருமாள் கோயிலில் திருடுவதற்கு மதியமே வந்து நோட்டம் பார்த்ததாகவும் கூறியிருக்கிறார். 'திருட வருவதற்குமுன் மது அருந்தியதால் போதை தலைக்கேறி கோயிலிலேயே படுத்துறங்கிவிட்டதால், திருடவில்லை' எனப் போலீஸாரிடம் கூறியிருக்கிறார். இதனைக் கேட்டு அருகில் இருந்தவர்கள் சிரித்துள்ளனர்.வேறு எந்ததெந்த ஊர்களில் உள்ள கோயில்களில் எல்லாம் திருடினேன் என்பது குறித்தும் காவல்துறை விசாரணையில் தெரிவித்துள்ளார் செந்தூர்பாண்டி.

கோயிலுக்குத் திருடன் வந்த விஷயம் மதுபோதையில் உறங்கிய சம்பவம், அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

More News

உத்திரபிரதேசம் மற்றும் டெல்லி போலீசார் தெலுங்கானா போலீசாரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் - மாயாவதி.

ஹைதராபாத்தில் ஒரு வாரம் முன்பு பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு எரித்து கொல்லப்பட்டார்

லாட்டரியில் கிடைத்த பணத்தில் வாங்கிய நிலத்தில் புதையல்: கொட்டும் அதிர்ஷ்டம்

கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு சமீபத்தில் லாட்டரியில் ரூபாய் 6 கோடி பரிசு கிடைத்தது. அந்த பணத்தில் அவர் ஒரு நிலத்தை வாங்கி விவசாயம் செய்த போது

என்கவுண்டர் கொண்டாட வேண்டிய விஷயம் கிடையாது. ஆனால்.... பிரபல நடிகை கருத்து

என்கவுண்டர் என்பது கொண்டாடப்பட வேண்டிய விஷயம் கிடையாது. ஆனால் இப்படி ஒரு நிலையை கொண்டு வந்தது இந்த சமூகம்தான் என்பதற்காக நாம் வெட்கப்படவேண்டும்,

என் மகளைக் கொன்றவர்கள் 7 ஆண்டுகளாக உயிரோடு இருக்கின்றனர்.. டெல்லி நிர்பயா தாயார் தெலுங்கானா என்கவுன்டரை வரவேற்று பேச்சு.

ஹைதராபாத் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

ஐதராபாத் போலீசை பாராட்டிய பிரபல விளையாட்டு வீராங்கனை

தெலுங்கானாவை சேர்ந்த பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்து எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான 4 பேர்களும் இன்று அதிகாலை என்கவுண்டரில் ஹைதராபாத் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்