திருடலாம்னு வந்தேன் சார்.. ஆனா தூக்கம் வந்துருச்சு. திருடப்போன இடத்தில் தூங்கிய திருடன்.
Send us your feedback to audioarticles@vaarta.com
விருதுநகரில் பெருமாள் கோயிலில் திருட வந்த செந்தூர்பாண்டி என்ற திருடன், மது போதையில் அங்கேயே உறங்கிவிட, அப்பகுதியில் ரோந்து சென்ற காவல்துறையினரிடம் சிக்கியுள்ள சம்பவம் நடந்துள்ளது.
விருதுநகர் ஆர்.ஆர் நகரில் அமைந்துள்ள பெருமாள் கோயில் வளாகத்தில் நேற்று இரவு ஒருவர் தூங்கிக்கொண்டிருந்தது அப்பகுதியில் ரோந்து சென்ற காவல்துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அருகில் சென்று பார்த்தபோது அவர் மதுபோதையுடன் உறங்கிக் கிடப்பதும் அவர் அருகில் டார்ச்லைட் மற்றும் இரும்புக்கம்பி இருந்ததையும் பார்த்து அவரைத் தட்டி எழுப்பி காவல்நிலையத்துக்குக் கூட்டிச் சென்றனர்.
அவரிடம் விசாரணை நடத்தியதில், கூலி வேலை செய்யும் தனக்கு போதிய வருமானம் இல்லை என்பதால், திருடத் தொடங்கியதாகவும் கடந்த 19 ஆண்டுகளாக வீடுகள், கடைகள், சிறு கோயில்களில் திருடி வருவதாகவும் சமீபத்தில் புலிகுத்தி கிராமத்தில் உள்ள சிவன் கோயிலில் உண்டியலைத் திருடிச் சென்றதாகவும் தெரிவித்தார்.மேலும், திருடிய பணத்தில் ஜாலியாக செலவு செய்து வந்ததாகவும் அடுத்து புல்லட் பைக் வாங்குவதற்குப் பணம் தேவைப்பட்டதால் பெருமாள் கோயிலில் திருடுவதற்கு மதியமே வந்து நோட்டம் பார்த்ததாகவும் கூறியிருக்கிறார். `திருட வருவதற்குமுன் மது அருந்தியதால் போதை தலைக்கேறி கோயிலிலேயே படுத்துறங்கிவிட்டதால், திருடவில்லை' எனப் போலீஸாரிடம் கூறியிருக்கிறார். இதனைக் கேட்டு அருகில் இருந்தவர்கள் சிரித்துள்ளனர்.வேறு எந்ததெந்த ஊர்களில் உள்ள கோயில்களில் எல்லாம் திருடினேன் என்பது குறித்தும் காவல்துறை விசாரணையில் தெரிவித்துள்ளார் செந்தூர்பாண்டி.
கோயிலுக்குத் திருடன் வந்த விஷயம் மதுபோதையில் உறங்கிய சம்பவம், அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aarna Janani
Contact at support@indiaglitz.com