கல்யாணத்தை மறைத்த தியாகராஜன்.. பிரஷாந்தை பார்த்து வியந்த சத்யராஜ்!! தியாகராஜன் லைஃப் ஸ்டோரி
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் தியாகராஜன் அவர்கள் இந்தியக்ளிட்ஸ் அனுப்பிய பேட்டியில், நான் திரைத்துறைக்கு வந்த போது, எனது மனைவி சொன்னது: "நீங்கள் சினிமா ஸ்டார் என்று தெரிந்து விட்டால், என் பிரைவேசி போய்விடும். அதனால், நீங்கள் கல்யாணம் ஆகாதவராவே காட்டிக் கொள்ளுங்கள்." என்று. அதனால், நானும் கல்யாணம் ஆகாத மாதிரியே காட்டிக் கொண்டேன்.
ஒரு நாள், எனது வீட்டிற்கு தனது தங்கையின் திருமண பத்திரிகை கொடுக்க வந்த நடிகர் சத்யராஜ் அவர்கள், எனது பையன் (பிரஷாந்த்) அப்போழுது பிளஸ் டூ படித்துக் கொண்டிருந்தார். பள்ளிக்குச் சென்று வீட்டிற்கு வந்த பிறகு, வீட்டில் எக்சைஸ் பண்ணிக் கொண்டிருந்தபோது, அந்த சமயம் வீட்டுக்கு வந்த சத்யராஜ், என்னை கேட்க உடனே பிரஷாந்த் அப்பா வெளியே போயிருக்கார் என்று சொல்லிவிட்டார். அதனால், ஷாக் ஆன சத்யராஜ், "தியாகராஜன், உங்க டாடியா என கேக்க, பிரஷாந்த் ஆம்" என்று சொல்லிவிட்டார். இதை சத்யராஜ் அனைவருக்கும் சொல்லிவிட்டார். இதைக் கேள்விப்பட்டவுடன், முதல் முதலில், நடிகர் பிரதாப் வந்து உன் மகனை அனுப்பு நான், அவனை வச்சு படம் எடுக்கணும் என்று மலையாளத்தில் "டெய்சி" என்ற ஒரு படம் எடுக்கிறேன். அதில் இவன்தான் ஹீரோ என்றார்.
அதன் பிறகு, டி. இராமாயிடு, பாலு மகேந்திரா போன்ற இயக்குனர்கள் படையெடுக்க ஆரம்பித்து விட்டனர். நான் பிரஷாந்த் பிளஸ் டூ முடிச்சிட்டு, எம்பிபிஎஸ் டாக்டருக்கு படிக்க போறாரு என்று சொல்லிவிட்டேன். இதற்கிடையில், சிவசக்தி பாண்டியன் வந்து, நாம் ஒரு படம் எடுக்கிறோம். அந்த படத்தோட பாட்டு மட்டும் கேளுங்கள். அந்த படத்தின் பாடல்களை ஒளிபரப்பினார்கள். பாடல்கள் சூப்பரா இருந்ததனால், கதையை கேட்டேன். கதையும் ஓரளவு அலைகள் ஓய்வதில்லை. போல் இருந்ததால், எத்தனை நாட்கள் சூட்டிங் என்று கேட்கும் போது, இந்த படத்தின் இயக்குனர் 18 நாட்கள் என்று சொன்னார். சரி, 18 நாட்கள் தானே என்று அனுப்பி வைத்தேன். அதன் பிறகு, வைகாசி பொறந்தாச்சு ரிலீஸ் ஆகி, சூப்பர் டூப்பர் ஹிட் ஆகிவிட்டது.
மேலும் தகவல்களுக்கு இந்த வீடியோவை பார்க்கவும்👇👇👇
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Mithra Anjali
Contact at support@indiaglitz.com
Comments