வெட்டி சாகடியுங்கள்: பொள்ளாச்சி குற்றம் குறித்து ஐஸ்வர்யா தத்தா
Send us your feedback to audioarticles@vaarta.com
பொள்ளாச்சி பாலியல் சம்பவம் குறித்து திரையுலகினர் பலர் கடும் ஆத்திரத்துடன் தங்கள் கருத்துக்களை பதிவு செய்துள்ள நிலையில் பிக்பாஸ் புகழ் நடிகை ஐஸ்வர்யா தத்தா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:
பொள்ளாச்சி பாலியல் சம்பந்தமான ஒருசில வீடியோக்களை நான் பார்த்தேன். அதை பார்க்கும்போது ரொம்ப கஷ்டமாக இருந்தது. இந்த ஜெனரேசன் மக்கள் நட்பை தவறாக பயன்படுத்துகின்றனர். ஆனால் ஒரு விஷயத்தை அவர்கள் யோசிப்பதில்லை. அவர்களுக்கும் அம்மா, அக்கா, தங்கைகள் உள்ளனர்.
பொதுவாக எவ்வளவு பெரிய தப்பு செய்தாலும் ஓரிரண்டு மாதம் ஜெயிலுக்கு சென்றுவிட்டு பின் மீண்டும் வெளியே வந்து அதே தவறை செய்கின்றனர். இந்தியன் போலீஸ் என்றாலே குற்றவாளிகளுக்கு ஒரு பயமில்லாமல் போய்விட்டது.
எனவே தயவுசெஞ்சு இந்த மாதிரி குற்றவாளிகளை சிறையில் அடைத்து நேரத்தை வீணாக்க வேண்டாம். அவர்களை வெட்டி சாகடியுங்கள், இவர்கள் நாட்டில் வாழ தகுதி அற்றவர்கள் என்று ஐஸ்வர்யா தத்தா கூறியுள்ளார்.
Really shame of those who don’t think about a girl as a human being ... behind the bar is a small thing they shud hang to death #PollachiAssaultCase ... pic.twitter.com/89L8bSTpH1
— Aishwarya dutta (@Aishwaryadutta6) March 14, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments