புதியவகை நோய்த்தொற்றுக்கு 4 ஆம் கட்ட அவசர நிலையைப் பிறப்பித்துள்ள சீனா!!! பரபரப்பு தகவல்!!!
- IndiaGlitz, [Tuesday,September 29 2020]
கடந்த ஜுன் மாத இறுதியில் சீனாவில் ஒரு புதிய வகை மர்மநோய் பரவி வருவதாகப் பரபரப்பு தகவல் வெளியானது. அதையடுத்து நடைபெற்ற ஆய்வுகளில் அந்நோய் புபோனிக் பிளேக் எனவும் கண்டுபிடிக்கப் பட்டது. ஏற்கனவே கடந்த 2011 முதல் சீனாவில் இத்தொற்றுநோய் பரவி வந்தாலும் தற்போது மங்கோலியா மற்றும் யுனான் மகாணங்களில் மீண்டும் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் யுனான் மற்றும் மங்கோலியாவின் பல நகரங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 4 ஆம் கட்ட அவசர நிலை அறிவிக்கப் பட்டுள்ளது. இதனால் மக்கள் அப்பகுதிகளில் கடும் பீதியடைந்து இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. உணவுகளைக் கொறிக்கும் வகையைச் சார்ந்த மர்மோட் எனப்படும் விலங்குகள் அதாவது எலி மற்றும் அணில் போன்ற விலங்குகளில் இருந்து பரவும் இந்த புபோனிக் பிளேக் நோய் மனிதர்களுக்கு குறைந்தது 24 மணி நேரத்தில் மரணத்தை ஏற்படுத்தக் கூடியது எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் மங்கோலியா மாகாணத்தின் மொத்தமுள்ள 27 நகரங்களில் தற்போது 17 நகரங்களில் இந்நோய்த்தொற்று அதிக பாதிப்பை ஏற்படுத்தி விட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால் அப்பகுதிகளில் அவசர நிலைப் பிறப்பிக்கப்பட்டு மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர். இந்நோய்த் தொற்றால் கடந்த ஜுலை 2,3 ஆம் தேதி வாக்கில் 15 வயது சிறுவன் உயிரிழந்தான். அதையடுத்து ஆடு மேய்த்த இரு சகோதரங்களுக்கு இந்நோய் தொற்று உறுதிச்செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் ஒருவருக்கு இந்நோய் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
ஒருகாலத்தில் மிகவும் ஆபத்தான நோயாகக் கருதப்பட்ட புபோனிக் பிளேக்கிற்கு தற்போது நவீன மருந்துகள் வந்துவிட்டன. ஆனாலும் நோயின் ஆரம்பக் கட்டத்திலேயே சிகிச்சை எடுத்துக் கொள்ளாவிட்டால் இந்நோய்த்தொற்று மிக விரைவில் மரணத்தை ஏற்படுத்தும் எனவும் மருத்துவர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.