'விருமன்' தேன்மொழி கேரக்டரில் நடிக்க இருந்தது இந்த பிரபல நடிகைகளா?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல இயக்குனர் முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள ’விருமன்’ திரைப்படத்தில் நாயகியாக பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நிலையில் இந்த படத்தில் முதலில் பிரபல நடிகைகள் மூன்று பேர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக இயக்குனர் முத்தையா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
’விருமன்’ படத்தில் இடம்பெற்ற தேன்மொழி என்ற கேரக்டருக்கு ராஷ்மிகா, கீர்த்தி சுரேஷ், மற்றும் சாய்பல்லவி ஆகிய மூவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் ஆனால் மூவரிடமும் கால்ஷீட் தேதிகள் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார். அதன்பிறகுதான் ஷங்கரின் மகள் அதிதிஷங்கர் இந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார் என்று தெரிவித்தார்.
மேலும் என்னுடைய மகளை நான் புகைப்படம் கூட எடுக்க விட மாட்டேன் என்றும் என்னை யாரும் பழமைவாதிகள் என்று சொன்னால் கூட நான் ஆமாம் பழமைவாதி தான் என்று ஒப்புக் கொள்வேன் என்றும் தற்போதைய காலகட்டத்தில் புகைப்படங்கள் தவறாகப் பயன்படுத்த வாய்ப்பு இருப்பதால் நான் என் மகளைக் கட்டுப்பாடாக வளர்த்துள்ளேன் என்று கூறினார்.
மேலும் ஷங்கரின் மகள் என்னுடைய மகள் போன்றவர் என்றும், என்னுடைய படத்தை பார்த்து அவர் எந்தக் குறையும் சொல்ல கூடாது என்பதற்காக மிகவும் ஜாக்கிரதையாக அவருடைய காட்சிகளை படமாக்கினேன் என்றும் இயக்குனர் முத்தையா அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments