'வாரிசு' ஆடியோ விழாவில் இந்த மூன்று பிரபலங்களா? ஆச்சரிய தகவல்!

தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ’வாரிசு’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் பிரமாண்டமாக உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

ஏற்கனவே இந்த படத்தில் இடம்பெற்ற மூன்று பாடல்கள் வெளியாகி மூன்றுமே ஹிட்டாகிய நிலையில் வரும் 24-ஆம் தேதி இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான மேடை அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’வாரிசு’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இந்திய திரையுலகில் முக்கிய பிரபலங்கள் கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக கமல்ஹாசன், ஷாருக்கான் மற்றும் மகேஷ் பாபு ஆகியோர் சிறப்பு விருந்தினராக இந்த விழாவில் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் விஜய்யின் அடுத்த படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ் இந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.

முதல் முறையாக விஜய் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் கமல்ஹாசன், ஷாருக்கான், மகேஷ்பாபு உள்ளிட்ட பிரபலங்கள்கலந்து கொள்ள இருப்பதாக வெளிவந்த தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.