பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடுத்தடுத்து வெளியேறுபவர்கள் இவர்கள் தானா? பிக்பாஸின் மறைமுக அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று ஒரு வித்தியாசமான டாஸ்க் போட்டியாளர்களுக்கு வைக்கப்பட்டது. தனி அறைக்கு ஒவ்வொரு ஒருசில போட்டியாளராக அழைத்த பிக் பாஸ் இந்த 60 நாட்களில் உங்களது பங்களிப்புகள் என்ன? நீங்கள் பிக்பாஸ் வீட்டில் என்னென்ன செய்தீர்கள்? என்பதை உங்களது ரசிகர்களுக்கு தெரிவிக்கவும் என்று குறிப்பிட்டு இருந்தார்
நேற்றைய இந்த டாஸ்க்கில் கலந்து கொண்ட ரமேஷ், ஆஜித், ஷிவானி, ரம்யா, சோம் மற்றும் நிஷா ஆகியோர்களில் ஒருவர் கூட தாங்கள் இந்த 60 நாள்களில் செய்த வித்தியாசமான செயல்கள் குறித்து கூறவில்லை. குறிப்பாக ஷிவானி, நிஷா ஆகிய இருவரும் பிக்பாஸ் கேள்விகளுக்கு பதில் சொல்ல திணறினர் என்பது குறிப்பிடத்தக்கது
பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களான அர்ச்சனா, பாலாஜி, ஆரி, சனம், அனிதா ஆகியோர்கள் நெகட்டிவ் ஆகவோ அல்லது பாசிட்டிவ் ஆகவோ தினமும் ஏதாவது கண்டெண்ட் கொடுத்துக் கொண்டே இருக்கின்றனர். இதனால் நிகழ்ச்சியின் சுவாரஸ்யம் அதிகரிக்கின்றது. ஆனால் ஒரு கண்டெண்ட் கொடுக்காமல் வெளியே இருக்கும் பார்வையாளர்கள் போல் உள்ளேயும் ஒருசில பார்வையாளர்கள் இருக்கின்றார்கள் என்பதை இந்த டாஸ்க் மூலம் பிக்பாஸ் வெளிப்படுத்தியுள்ளதாகவே தெரிகிறது
எனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அடுத்தடுத்து இந்த ஆறு பேர்கள் தான் வெளியேறுபவர்கள் என்பதை பிக்பாஸ் மறைமுகமாக குறிப்பிட்டதுபோல் பார்வையாளர்களுக்கு புரிந்துள்ளது. பிக்பாஸ் வீட்டில் தங்கிய 60 நாட்களில் என்ன செய்தோம் என்று எதுவுமே ஞாபகம் இல்லை என்று இந்த போட்டியாளர்கள் கூறியிருப்பது உண்மையில் ஆச்சரியமான ஒன்றுதான்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com