சென்னை, தூத்துக்குடி நகரங்களுக்கு வரப்போகும் கொடிய ஆபத்து… எச்சரிக்கும் நாசா!
- IndiaGlitz, [Wednesday,August 11 2021]
பூமியின் வெப்பநிலை அதிகரித்து வருவது குறித்து உலக விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் சென்னை, தூத்துக்குடி போன்ற பகுதிகளில் தொடர்ந்து கடல்நீர் மட்டம் உயர்ந்து வருவதைச் சுட்டிக்காட்டிய நாசா விஞ்ஞானிகள் இதனால் வரும் 2100ஆம் ஆண்டுகளில் சென்னை மற்றும் தூத்துக்குடி நகரங்கள் காணாமல் போவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரித்துள்ளனர்.
ஐ.நா. கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிட்ட பருவநிலை மாற்றம் தொடர்பான அறிக்கையில் பூமியில் வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் தற்போது இருக்கும் வெப்பநிலையைவிட மேலும் 1.5டிகிரி செல்சியஸ் வெப்பம் உயரும் என எச்சரித்துள்ளது. இதனால் உலகம் முழுவதும் தொடர்ந்து கனமழை, அனல்காற்று, அதிக வெப்பம் போன்ற இயற்கை பேரிடர்கள் அதிகரிக்கும் என்று கூறப்பட்டு உள்ளது.
இதைத்தவிர வெப்பம் அதிகரிப்பதால் துருவப்பகுதியில் உள்ள பனிக்கட்டிகள் உருகி தற்போது மக்கள் வசித்து வரும் நல்ல தீவுகள் கூட எதிர்காலத்தில் அழிந்து போகலாம் எனவும் எச்சரித்துள்ளது.
பூமியில் அதிகரித்துவரும் வெப்பத்தால் கடல்நீர் மட்டம் உயரும் என ஐ.நா வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, தற்போது நாசா விஞ்ஞானிகள் புது ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளனர். அதன்படி பூமியில் அதிகரித்துவரும் அதிக வெப்பத்தால் உலகம் முழுவதும் உள்ள கடல்நீர்மட்டம் எந்த அளவிற்கு உயரும் என்ற கணிப்பை வெளியிட்டு இருக்கிறது.
இதன்படி இந்தியாவில் சென்னை, மும்பை, கொச்சி, விசாகப்பட்டிணம் உள்ளிட்ட 12 கடற்கரை நகரங்கள் வரும் 2,100 ஆம் ஆண்டிற்குள் கடலில் மூழ்கிவிடும் அபாயம் இருப்பதாக நாசா அறிக்கை வெளியிட்டு இருக்கிறது.
காண்ட்லா (Kandla) – 1.87 அடி
ஓகா (Okha) – 1.96 அடி
பவுநகர் (Bhaunagar)- 2.70 அடி
மும்பை (Mumbai)- 1.90 அடி
மோர்முகாவோ (Mormugao) – 2.06 அடி
மங்களூர் (Mangalore) – 1.87 அடி
கொச்சி (Cochin) – 2.32 அடி
பரதீப் (Paradip) – 1.93 அடி
கிதிர்பூர் (Khidirpur) – 0.49 அடி
விசாகப்பட்டிணம் (Visakhapatnam) – 1.77 அடி
சென்னை (Chennai) – 1.87 அடி
தூத்துக்குடி (Tuticorin ) – 1.9 அடி
நாசா வெளியிட்டுள்ள இந்த அறிக்கையின்படி தமிழகத்தைச் சார்ந்த சென்னை, தூத்துக்குடி நகரங்கள் அதிக ஆபத்துக் கொண்டவை எனக் குறிப்பிடப்பட்டு இருப்பதும் பீதியை ஏற்படுத்துகிறது.