இது எங்களின் தவறல்ல, ஆனாலும் சமாளிப்போம்: லாஸ்லியாவின் உணர்வுபூர்வ பதிவு!
Send us your feedback to audioarticles@vaarta.com
இது எங்களுடைய தவறல்ல, ஆனாலும் நாங்கள் சமாளிப்போம் என பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான லாஸ்லியா தனது சமூக வலைத்தளத்தில் உணர்வுபூர்வமாக பதிவு செய்துள்ளார்.
இலங்கையைச் சேர்ந்த செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதன் பின் தமிழ் திரை உலகில் சில படங்களில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே .
இந்தநிலையில் இலங்கையில் தற்போது பொருளாதார நெருக்கடி காரணமாக அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் லாஸ்லியா கூறியிருப்பதாவது:
இலங்கையர்களாகிய ஆகிய நாங்கள் மிக மோசமான போரை எதிர்கொண்டோம், அதில் எங்கள் குடும்பங்கள் உள்பட அனைத்தையும் இழந்தோம். அதன் பிறகு சுனாமியை எதிர்கொண்டோம். 2019ஆம் ஆண்டு தேவாலயங்களில் குண்டுவெடிப்புகளை எதிர்கொண்டோம். அதன்பிறகு கொரோனா வைரஸ் பாதிப்புகளை எதிர்கொண்டோம். இப்போது பொருளாதார நெருக்கடியை எதிர் கொள்கிறோம் .
இவை எதையுமே எங்களின் தவறல்ல, நாங்கள் இலங்கையர்கள் என்பதால் இவை அனைத்தையும் எதிர்கொள்கிறோம். ஒவ்வொரு சூழ்நிலையிலும் இவை அனைத்தையும் எதிர்கொள்ளும் அளவுக்கு நாங்கள் பலமாக இருந்தோம். இப்போது இந்த பரிதாபமான சூழ்நிலையைச் சமாளிக்க ஒன்றாக இருப்போம், ஒருவருக்கொருவர் ஆதரவளிப்போம்’ என லாஸ்லியா அந்தப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com