இந்த 10 மாநிலங்களில் தான் கொரோனா பாதிப்பு அதிகம்...!சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்....!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்த 10 மாநிலங்களில் தான் கொரோனா பாதிப்பு அதிகம்...!சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்....!
இந்தியாவில் குறிப்பிட்ட எந்த மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது என, சுகாதாரத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மஹாராஷ்டிரா விளங்குகிறது. ஒரு நாளில் மட்டும் இங்கு 63,729 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சுமார் 38.09% கொரோனா நோயாளிகள் அங்குதான் உள்ளனர். இதைத்தொடர்ந்து உத்தரப் பிரதேச மாநிலத்தில் 27,360 நபர்களுக்கும், டெல்லியில் 19,486 நபர்களுக்கும் ஒரே நாளில் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் சுகாதாரத்துறை அதிகம் பாதிக்கப்பட்ட 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
• மகாராஷ்டிரா,
• உத்தரப் பிரதேசம்
• டெல்லி
• சட்டீஸ்கர்
• கர்நாடகா
• மத்தியப் பிரதேசம்
• கேரளா
• குஜராத்
• தமிழ்நாடு
• ராஜஸ்தான்
உள்ளிட்ட 10 மாநிலங்களில் தினசரி கொரோனா பாதிப்பு என்பது ஏறுமுகமாகவே உள்ளது. ஹரியானா,தெலங்கானா, உத்தரகாண்ட், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களிலும் கொரோனாவின் தாக்கம் அதிகமாகவே உள்ளது.
முக்கியமாக மகாராஷ்டிரா, சட்டீஸ்கர், உத்தரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களில், 65.02% -ஆக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இன்றைய காலை நிலவரப்படி சுகாதாரத்துறை பணியாளர்கள், கொரோனா முன்களப் பணியாளர்க்ள், 60 வயதுக்கு அதிகமானவர்கள் , 45 முதல் 60 வயதுக்கு உட்பட்ட பெரியவர்கள் என, 17,37,539 செஷன்களில் 11,99,37,641 கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments