உன்னால மட்டும் தான் முடியும்.. முக்கிய பணியை பாடலாசிரியருக்கு கொடுத்த விஜய்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாட்டை நடிகர் விஜய் நேற்று பிரமாண்டமாக நடத்தி முடித்த நிலையில், இந்த மாநாடு குறித்து அனைத்து ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன என்பதும், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளில் இந்த மாநாடு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்றைய மாநாட்டில் தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை பாடல் வீடியோ வெளியானது. "பிறப்புக்கும் எல்லா உயிர்க்கும்" என்று தொடங்கும் இந்த பாடல், மிகவும் அழகாகவும் உத்வேகத்துடனும் கட்சியின் கொள்கைகளை பறைசாற்றும் வகையிலும் எழுதப்பட்டிருந்தது. இந்த பாடலை எழுதியது தெருக்குரல் அறிவு என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பாடலை எழுதிய அனுபவம் குறித்து அறிவு தனது சமூக வலைதளத்தில் கூறியபோது, "இந்த பாடலை எழுத என்னை ஏன் தேர்வு செய்தீர்கள்?" என்று கேட்டேன். அதற்கு விஜய், "இதை செய்ய உன்னால் மட்டும் தான் முடியும்," என்று கூறினார்.
தமிழக வெற்றி கழகத்தின் கட்சி கொள்கை பாடலை எழுத என்னை நம்பிய விஜய்க்கு நன்றி. உங்கள் குரலை பதிவு செய்தது என் வாழ்க்கையில் மறக்க முடியாத நினைவாக இருக்கும். உங்கள் அரசியல் பயணம் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்," என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
I asked him "Why did you choose me?"
— Therukural Arivu (@Arivubeing) October 28, 2024
He said "Only you can do it!"
Thank you @actorvijay sir for trusting me to compose the Ideology song for TVK @tvkvijayhq . Recording your voice will be the greatest memory of my life.
Wishing you all the success in your political venture🪷 pic.twitter.com/2MUnYNzaEu
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com