ரோலிங் ஸ்டோன் இதழில் "தெருக்குரல் அறிவு" புகைப்படம் வெளியானது....!
Send us your feedback to audioarticles@vaarta.com
பாடலாசிரியர் அறிவு புகைப்படம், இம்மாத ரோலிங் ஸ்டோன் அட்டைப்படத்தில் வெளியாகியுள்ளது.
ரோலிங் ஸ்டோன் என்ற இணைய இதழ் சர்வதேச அளவிலான இசை இதழாகும். இதில் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான அட்டைப்படத்தில், பாடகி தீ மற்றும் பாடகர் ஷான் வின்செண்ட் டீ பால் உள்ளிட்டோரின் சர்வதேச இசை சாதனைகளை பாராட்டி புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது 'எஞ்சாய் எஞ்சாமி' மற்றும் ’நீயே ஒளி’ உள்ளிட்ட பாடல்களின் பிரமாண்ட வெற்றி தான். ஆனால் இந்த இரண்டு பாடல்களையும் எழுதிய, பாடலாசிரியர் ’தெருக்குரல்’ அறிவு அவர்களின் படம் இடம்பெறாமல் இருந்தது.
பாடல் உருவானது....!
இண்டிபென்டெண்ட் ஆல்பம் பாடலாக உருவான என்ஜாயி எஞ்சாமி பாடல்,சந்தோஷ் நாராயணன் இசையில், பாடகர்கள் அறிவு மற்றும் தீ குரலில் வெளியாகியிருந்தது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டி தொட்டியெல்லாம் பரவிய இந்தப்பாடல், இதுவரை யுடியூப் தளத்தில் 320 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது.
இதேபோல் 'நீயே ஒளி’ பாடலை ஷான் வின்செண்ட் டீ பால் மற்றும் அறிவு எழுதி, இணைந்து பாடியிருப்பார்கள். இதேபோல் "சார்பட்டா பரம்பரை" படத்தில் இடம்பெற்றுள்ள, மற்றொரு வெர்ஷன் பாடலை அறிவு எழுதி, சந்தோஷ் நாராயணன் பாடியிருப்பார்.
ரோலிங் ஸ்டோன் சர்ச்சை....!
ரோலிங் ஸ்டோன் இதழினுடைய அட்டை படத்தில், அறிவின் புகைப்படம் இடம்பெறாததற்கு இயக்குநர் பா.ரஞ்சித், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், திரையுலக பிரபலங்கள் மற்றும் சமூக வலைதள ரசிகர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர், அறிவுக்கு ஆதரவாகவும் பல கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். இப்பிரச்சனை சமூகவலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் பேசுபொருளாக மாறியது.
இந்நிலையில் ஆகஸ்ட் மாத இணைய இதழில் பாடகர் தெருக்குரல் அறிவு அவர்களின் புகைப்படம், தற்போது இடம்பெற்றுள்ளது. இதை ரோலிங் ஸ்டோன் தன் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு, சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.இதற்கு இணையத்தில் பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்
#BeyondBorders: Wordsmith, composer and rapper @TherukuralArivu appears on our August 2021 digital cover. Following acclaim for his album ‘Therukural’ with @ofrooooo, the Tamil artist has scorched a path out, raising his voice against systemic injustices
— Rolling Stone India (@RollingStoneIN) August 27, 2021
Photo: @beraviphoto pic.twitter.com/7lPd5bSfZW
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aarna Janani
Contact at support@indiaglitz.com