தல அஜித்தின் வலிமை....!அறிமுகப்பாடல் தெருக்குரல் அறிவு எழுதியுள்ளாரா.....?

  • IndiaGlitz, [Wednesday,July 21 2021]

தல அஜித் நடித்துவரும் வலிமை திரைப்படத்தை, இயக்குனர் வினோத் இயக்கிவருகிறார் என்பது நமக்கு தெரிந்த ஒன்றே. இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்புகள் கொரோனாவால் முடிவடையாத நிலையில், தளர்வுகள் அறிவிக்கப்பட்டபின் சண்டைக்காட்சிகள் மற்றும் இணைப்புக்காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இத்திரைப்படத்தின் முதல் பாடல், வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானதில், அறிவு, தாமரை, விக்னேஷ் சிவன் உள்ளிட்ட பாடலாசிரியர்கள் டேக் செய்யப்பட்டிருந்தார்கள். இந்நிலையில் தல அஜித்தின் அறிமுகப்பாடலை 'தெருக்குரல்’ அறிவு எழுதியிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. அதுவும் ராப் பாடலாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

தெருக்குரல் அறிவு ரஜினியின் காலா படத்தில், 'உரிமையை மீட்போம்' என்ற பாடல் மூலம் பாடலாசிரியராகவும், பாடகராகவும் அறிமுகமானார். விஜயின் மாஸ்டர் படத்தில் ‘வாத்தி ரெய்டு’ பாடலை எழுதியதும் இவர் தான்.

More News

முதல் படம், 50வது படம், 100வது படம்: வெங்கட்பிரபுவுடன் இணைந்த பிரபலம்!

பிரபல இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் முதல் படத்தில் பணிபுரிந்த தொழில்நுட்ப கலைஞர் ஒருவர், அவரது 50வது படத்திலும் 100வது படத்திலும் வெங்கட்பிரபு உடன் பணிபுரிந்த அபூர்வ ஒற்றுமை

மணிரத்னத்தின் “பொன்னியின் செல்வன்“ நடிகர்கள்… ஏற்று நடிக்கும் கதாபாத்திரம், தனித்தன்மைகள்!

பிரபல எழுத்தாளர் கல்கி எழுதிய சோழ ராம்ராஜ்ஜியத்தின் வரலாற்றைக் கூறும் நாவல் “பொன்னியின் செல்வன்”.

கமல்ஹாசனை தூக்கி கையில் வைத்துள்ள சிவாஜி: நினைவு நாளில் பகிர்ந்த புகைப்படம்!

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் கடந்த 2001ஆம் ஆண்டு இதே நாளான ஜூலை 21ஆம் தேதி மறைந்தார் என்பதும் அவரது மறைவிற்கு ஒட்டுமொத்த இந்திய திரையுலகமே இரங்கல் தெரிவித்தது

கமல் கூறும் கட்டிப்பிடி வைத்தியம்....! இதில் உள்ள சுவாரஸ்யமான நன்மைகள் என்னென்ன...?

மனிதன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு  உணவும், உடற்பயிற்சியும் தேவையான ஒன்று. இதையும் தாண்டி மன நிம்மதி மற்றும் சந்தோஷத்திற்கு,

புதிய மீன்பிடி சட்ட வரைவை திரும்ப பெறவில்லையெனில் கடும் போராட்டம் நடக்கும்....! ஒன்றியஅரசுக்கு சீமான் எச்சரிக்கை....!

வாழையடி வாழையாக மீன் தொழில் செய்து வரும் நம் ஊரில் உள்ள மீனவர்களை, பன்னாட்டு நிறுவனங்களின்