எஞ்சாய் எஞ்சாமி பாடல்: மாறி மாறி அறிக்கை வெளியிட்ட தெருக்குரல் அறிவு மற்றும் சந்தோஷ் நாராயணன்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தயாரிப்பில் தீ மற்றும் தெருக்குரல் அறிவு ஆகியோர் பாடிய ‘எஞ்சாய் எஞ்சாமி’ என்ற பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் யூட்யூபில் இந்த பாடல் ஒரே மாதத்தில் நூறு மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்தது என்பது தெரிந்ததே
இந்த நிலையில் இந்த பாடலில் தெருக்குரல் அறிவு பெயர் இருட்டடிக்கப்பட்டதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் தற்போது நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த செஸ் விளையாட்டு போட்டியின் தொடக்க விழாவில் இந்த பாடல் பாடப்பட்டது.
இந்த நிலையில் இந்த பாடல் குறித்து தெருக்குரல் அறிவு ஒரு அறிக்கையை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: எஞ்சாய் எஞ்சாமி பாடலுக்கு நான் இசையமைத்தேன்.. எழுதினேன்.. பாடினேன்.. நடித்தேன். யாரும் எனக்கு ஒரு டியூனையோ, மெலடியையோ அல்லது ஒரு வார்த்தையோ எழுதி கொடுக்கவில்லை. கிட்டத்தட்ட 6 மாதங்கள் தூக்கமில்லாமல், மன அழுத்தம் நிறைந்த இரவுகளையும் பகலையும் இந்த பாடலுக்காக கழித்தேன்.
இது ஒரு சிறந்த டீம் ஒர்க் என்பதில் சந்தேகமில்லை. அந்த பாடலில் அனைவருடைய பங்களிப்பும் இருக்கும் இருகிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அது வள்ளியம்மாளின் சரித்திரமோ அல்லது நிலமற்ற தேயிலைத் தோட்ட அடிமை என் முன்னோர்களின் சரித்திரமோ அல்ல. என்னுடைய ஒவ்வொரு பாடலும் இன்றைய தலைமுறை ஒடுக்குமுறையின் அடையாளமாக இருக்கும்.
இந்நாட்டில் 10000 நாட்டுப்புறப் பாடல்கள் உள்ளன. முன்னோர்களின் மூச்சு, அவர்களின் வலி, அவர்களின் வாழ்க்கை, அன்பு, அவர்களின் எதிர்ப்பு பற்றிய அனைத்தையும் சுமந்து செல்லும் பாடல்கள். இவை அனைத்தும் அழகான பாடல்களின் மூலம் உன்னிடம் பேசுகிறது. ஏனென்றால் நாம் இரத்தமும் வியர்வையுமான விடுதலைக் கலைகளின் மெல்லிசைகளாக மாறிய தலைமுறை.
பாடல்கள் மூலம் பாரம்பரியத்தை எடுத்துச் செல்கிறோம். நீங்கள் உறங்கும் போது உங்கள் பொக்கிஷத்தை யார் வேண்டுமானாலும் அபகரிக்கலாம். நீங்கள் விழித்திருக்கும் போது ஒருபோதும் உங்களிடம் இருப்பதை யாராலும் பறித்துவிட முடியாது. ஜெய்பீம்’ என்று பதிவு செய்திருந்தார்.
இந்த நிலையில் தெருக்குரல் அறிவு அறிக்கை வெளியான ஒருசில மணி நேரங்களில் இதற்கு பதிலளிக்கும் விதமான இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நான் இப்போது வேறு மொழியில் indie இசையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். இதில்தான் என் முழு கவனத்தையும் நேரத்தையும் செலவிடுகிறேன்.
என்ஜாயி என்ஜாமி பாடல் உடனான எனது பயணத்தைப் பற்றி கூற விரும்புகிறேன். கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், நமது வரலாற்றையும் இயற்கையும் கொண்டாடும் விதமாக தமிழில் ஒரு பாடல் பண்ண வேண்டும் என்று தீ என்னிடம் கூறினார். அதன் பிறகு நான் "என்ஜாய் என்ஜாமி" பாடலை கம்போஸ், ப்ரோக்ராம் மற்றும் ரெகார்டிங் செய்து, இணைந்து பாடினேன்’ என்று தெருக்குரல் அறிவின் பதிவுக்கு நீண்ட விளக்கம் கொடுத்துள்ளார்.
இந்த பாடலை நான் தான் கம்போஸ் செய்தேன் என தெருக்குரல் அறிவு மற்றும் சந்தோஷ் நாராயணன் ஆகிய இருவருமே கூறி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
???? pic.twitter.com/7Rzhk6MXj2
— Santhosh Narayanan (@Music_Santhosh) August 1, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments