நிஜத்தில் 'ஹீரோ'வாக மாறிய 'தெறி' வில்லன்

  • IndiaGlitz, [Wednesday,July 05 2017]

தளபதி விஜய் நடித்த 'தெறி' உள்பட பல படங்களில் வில்லன் கேரக்டரில் நடித்தவர் தீனா. இவர் சினிமாவில் தான் வில்லன், ஆனால் நிஜத்தில் சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்ந்த ஒரு ஹீரோவாகியுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகர் தீனா தனது ராயபுரம் வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு சிறுமி உடல்நலமுற்று இருந்ததை பார்த்து அவரை மருத்துவமனையில் சேர்க்க உதவியுள்ளார். தனுஸ்ரீ என்ற அந்த சிறுமிக்கு இரண்டு அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டும் என்றும் அதற்கு சுமார் ரூ.20 லட்சம் செலவாகும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்
இதனால் அதிர்ச்சி அடையாத தீனா, உடனே தன்னுடைய ஃபேஸ்புக்கில் அந்த சிறுமியின் நிலையை விளக்கி, அவருடைய அறுவை சிகிச்சைக்கு நிதியுதவி செய்யுமாறு கேட்டுக்கொண்டார். இந்த பதிவினை பார்த்த பல நல்ல உள்ளங்கள் அவர்களால் முடிந்த பணத்தை அனுப்ப, ஒருசில நாட்களில் தேவைக்கும் அதிகமான பணம் குவிந்துவிட்டது.
இந்த நிலையில் தற்போது அறுவை சிகிச்சை முடிந்து தனுஸ்ரீ பூரண குணம் அடைந்துள்ளார். இதுகுறித்து தனது சமூகவலைத்தளத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ள தீனா, தன்னுடைய கோரிக்கையை ஏற்று பணம் அனுப்பிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி என்றும் தற்போது தனுஸ்ரீ பூரண குணம் அடைந்துள்ளது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாகவும், தான் சினிமாவில் பெரிய ஆளாக மாறினால் கூட கிடைக்காத சந்தோஷம் தற்போது கிடைத்துள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் இதேபோன்ற சேவையை தொடரவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். சினிமாவில் வில்லனாகவும், நிஜத்தில் ஹீரோவாகவும் உள்ள தீனாவுக்கு சமூகவலைத்தளத்தில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
இதே தீனா தான் சமீபத்தில் கோவிலில் பிச்சை எடுத்து வந்த 'காதல்' பட நடிகர் விருச்சிககாந்த் அவர்களை மீட்டு, அவர் தற்போது நல்ல நிலையை நோக்கி சென்று கொண்டிருப்பதற்கு காரணமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.


More News

ரஜினியின் ட்வீட்டால் அடித்துக்கொள்ளும் விஜய்-அஜித் ரசிகர்கள்

தமிழ் திரையுலகினர் தற்போது சந்தித்து வரும் ஜிஎஸ்டி மற்றும் தமிழக அரசின் கேளிக்கை வரி பிரச்சனைக்கு அனைத்து திரையுலகினர்களும் இணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.

பீர் ஆரோக்கிய பானம் என்றால் மருந்துக்கடையில் விற்பீர்களா? அமைச்சருக்கு பிரபல நடிகை கேள்வி

தமிழகம் போலவே நமது அண்டை மாநிலமான ஆந்திரபிரதேசத்திலும் மதுவுக்கு எதிராக பொதுமக்களும் எதிர்க்கட்சிகளும் போராடி வருகின்றன...

பாவனா வழக்கில் திடீர் திருப்பம்: கைதாகும் பிரபலங்கள்?

பிரபல தமிழ், மலையாள நடிகை பாவனா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மர்ம நபர்களால் காரில் கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு ஆளான வழக்கில் விரைவில் மலையாள சினிமாவின் நட்சத்திர ஜோடி திலீப்-காவ்யா மாதவன் சிக்குவார்கள் என்று கூறப்படுகிறது.,

ஆதார் இருந்தால்தான் திருமணம்! மத்திய அரசின் அடுத்த அதிரடி

கடந்த சில மாதங்களாகவே இந்திய குடிமகனின் அடையாள அட்டையான ஆதார் அட்டை எண்ணை அனைத்து முக்கிய ஆவணங்களிலும் இணைக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. ரேசன் கார்டு, பாஸ்போர்ட், வங்கிக்கணக்கு, பான் அட்டை உள்பட பல ஆவணங்களில் ஆதார் அட்டையை இணைப்பது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது...

கேளிக்கை வரி விவகாரம்: லைகா நிறுவனம் அதிரடி முடிவு

கடந்த 1ஆம் தேதி ஜிஎஸ்டி வரி நடைமுறைக்கு வந்ததில் இருந்தே தமிழ்த்திரையுலகம் பெரும் சிக்கலில் தவித்து வருகிறது. ஜிஎஸ்டி வரி மட்டுமின்றி தமிழக அரசின் 30% வரியும் கட்ட வேண்டிய நிலை திரையுலகினர்களுக்கு ஏற்பட்டுள்ளதால் கமல், ரஜினி உள்பட ஒட்டுமொத்த திரையுலகினர்களும் இரட்டை வரிவிதிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்...