100 அடி உயரத்தில் இருந்து டூப் இன்றி குதித்த விஜய்

  • IndiaGlitz, [Saturday,January 16 2016]
இளையதளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் 'தெறி' படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் முடிந்துவிடும் நிலையில் அந்த

படத்தை குறித்து அவ்வப்போது ஆச்சரியமான செய்திகள் வெளிவந்து கொண்டே உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஹாலிவுட்டையே மிஞ்சும் அளவுக்கு தண்ணீருக்கு அடியில் ஒரு ஆக்சன் காட்சியில் விஜய் நடித்ததாக செய்திகள்வெளிவந்த நிலையில் தற்போது விஜய் சுமார் 100 அடி உயரத்தில் இருந்து டூப் இன்றி குதித்து சாகசம் செய்ததாக தகவல்கள் கூறுகின்றன. டூப் இன்றி விஜய்100 அடி உயரத்தில் துணிச்சலுடன் குதித்ததை படக்குழுவினர் ஆச்சரியமாக பேசி வருகின்றனர்.

விஜய், சமந்தா, எமிஜாக்சன், பிரபு, ராதிகா சரத்குமார்,இயக்குனர் மகேந்திரன், சத்யராஜ், மொட்டை ராஜேந்திரன், அழகம் பெருமாள், காளி வெங்கட், உள்பட பலர் நடிக்கும் இந்த படத்தில் நடிகை சுனைனா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்து வரும் இந்த படம் இவருக்கு50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. கலைப்புலி எஸ்.தாணு இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்து வருகிறார்.

More News

காதலர் தினத்தில் ரிலீஸ் ஆகும் விஜய்சேதுபதி படம்

விஜய்சேதுபதியின் 'நானும் ரெளடிதான்' திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனதில் இருந்து அவருக்கு கோலிவுட்டில் வாய்ப்புகள் பெருகி வருகிறது...

தனஞ்செயன் தயாரிக்கும் முதல் படத்தின் ஃபர்ஸ்ட்லுக்

யூடிவி நிறுவனத்தின் தென்னிந்திய பொறுப்பாளராக இருந்த தனஞ்செயன் தற்போது புதிய பட நிறுவனம் ஒன்றை தொடங்கி அதன் மூலம் தயாரிக்கவுள்ள முதல் படத்தை அறிவித்துள்ளார்...

பாபிசிம்ஹா தயாரிக்கும் முதல் படம்

'ஜிகர்தண்டா' படத்தில் தேசிய விருது பெற்ற பின்னர் பாபிசிம்ஹாவுக்கு திரைப்பட வாய்ப்புகள் குவிந்திருப்பதை நாம் ஏற்கனவே பலமுறை பார்த்திருக்கின்றோம்...

ஜீவா படத்தில் இணையும் 'தெறி' நடிகை

விஜய்யின் 'தெறி' படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வரும் நடிகை சுனைனா. இவர் தற்போது ஜீவா, பாபிசிம்ஹா...

'ரஜினிமுருகன்' திரைவிமர்சனம்

சிவகார்த்திகேயன் நடித்த படங்களிலேயே அதிக பிரச்சனைகளை சந்தித்து வெளிவந்த படம் இதுதான். 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' என்ற படத்தை கமர்ஷியலாக கொடுத்த இயக்குனர் பொன்ராம், மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து இயக்கிய படம்தான் 'ரஜினிமுருகன்' இந்த படத்தின் விமர்சனத்தை தற்போது பார்ப்போம்....