close
Choose your channels

'தெறி'யில் விஜய்க்கு எத்தனை வேடம். இதுவரை வெளிவராத தகவல்

Wednesday, March 16, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் நடித்துள்ள 'தெறி' படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் கடந்த சில நாட்களாக வெளிவந்து கொண்டிருக்கும் இந்த படத்தின் ஸ்டில்களை வைத்து விஜய் இந்த படத்தில் இரண்டு வேடத்தில் அல்லது மூன்று வேடங்களில் நடித்துள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.


ஆனால் உண்மையில் விஜய்க்கு இந்த படத்தில் ஒரே வேடம்தான் என்றும், மூன்றுவிதமான கெட்டப்புகளில் அவர் தோன்றுகிறார் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.

விஜய்-சமந்தா அன்பான ஜோடியின் மகள்தான் நைனிகா என்றும், வில்லன் கோஷ்டியினர் சமந்தாவை கொலை செய்தவுடன் நைனிகாவை மொட்டை ராஜேந்திரன் மூலம் வட நாட்டிற்கு ரகசியமாக அனுப்பிவிட்டு, விஜய் வில்லன்களை பதம் பார்ப்பதாகவும், கடைசியில் நைனிகாவுடன் மீண்டும் அவர் இணைவதுதான் படத்தின் கதை என்று கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் அட்லியின் திறமையை முழுமையாக புரிந்து கொண்ட விஜய், அவரை வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுத்ததோடு, மீண்டும் கண்டிப்பாக நாம் இணைந்து இன்னொரு படத்தில் இணைவோம் என்று உறுதி அளித்துள்ளாராம். எனவே 'தெறி' ரிலீஸுக்கு முன்போ அல்லது ரிலீஸுக்கு பிறகோ அட்லியிடம் இருந்து 'தெறி 2' அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment