close
Choose your channels

'தெறி' படத்தில் விஜய் எம்.ஜி.ஆர் ரசிகர்

Thursday, February 4, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'தெறி' படத்தின் டீசர் நாளை ரிலீஸாகவுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த படத்தில் விஜய், விஜயகுமார் ஐ.பி.எஸ் என்ற கேரக்டரில் நடித்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இந்த படத்தில் விஜய், மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் ரசிகராக நடித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.


இளையதலைமுறை நடிகர்களில் பலர் விஜய் மற்றும் அஜித் ரசிகர்களாக சினிமாவில் தோன்றி வரும் நிலையில் விஜய், 'தெறி' படத்தில் எம்.ஜி.ஆரின் ரசிகராக நடித்துள்ளதாக வெளிவந்துள்ள தகவல் அனைவரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அனைத்து தரப்பினர்களுக்கும் எம்.ஜி.ஆரை பிடிக்கும் என்பதால் இந்த படத்திற்கு இதுவொரு பெரிய ப்ளஸ் பாயிண்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய், சமந்தா, எமிஜாக்சன், மகேந்திரன், மொட்டை ராஜேந்திரன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்காக இசையமைத்த பாடல்கள் வெளியாகும் தேதியும் விரைவில் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது. கலைப்புலி எஸ்.தாணு பிரமாண்டமாக தயாரித்துள்ள இந்த படத்தை 'ராஜா ராணி' இயக்குனர் அட்லி இயக்கியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.