close
Choose your channels

'தெறி' - டீசர் விமர்சனம்

Friday, February 5, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பெரும் எதிர்பார்ப்புடன் விஜய் ரசிகர்கள் காத்திருந்த 'தெறி' படத்தின் டீசர் இன்று அதிகாலை சரியாக 12 மணியளவில் ரிலீஸாகி விஜய் ரசிகர்களை உற்சாகத்தின் உச்சத்திற்கு அழைத்து சென்றுள்ளது.

'தெறி' படத்தின் 50 வினாடிகள் டீசரில் 'துப்பாக்கி' படத்தை அடுத்து விஜய்யின் அதிரடி ஆக்சன் படம் ஒன்று உருவாகியுள்ளது என்பது தெரிய வருகிறது. விஜய்யின் அதிரடி ஆக்சன் காட்சிகள் சூப்பர் ஸ்டார் பட்டத்தை அவர் நெருங்கிவிட்டதாக தெரிகிறது. 'டுவிங்கிள் டுவிங்கிள் லிட்டில் ஸ்டார்' என்ற அனைவருக்கும் தெரிந்த குழந்தைகள் பாடலை பஞ்ச் வசனமாக வைத்த அட்லியின் புத்திசாலித்தனம் பாராட்டப்பட்டு வருகிறது.

மேலும் எடிட்டர் ரூபன் 50 வினாடிகள் டீசரில் பல ஷாட்களை இணைத்து ஒரு ஆக்சன் விருந்தாகவே விஜய் ரசிகர்களுக்கு அளித்துள்ளார். அதிரடி ஆக்சன் காட்சிகளுக்கேற்றவாறு ஜி.வி.பிரகாஷின் பின்னணியும் அபாரமாக அமைந்துள்ளது. மேலும் 'தெறி' படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்துடன் முற்றிலும் வித்தியாசமான இன்னொரு தோற்றத்திலும் விஜய் தோன்றும் காட்சிகளும் டீசரில் இடம்பெற்றுள்ளது. விஜய் இந்த படத்தில் இரண்டு வேடங்களில் நடித்துள்ளாரா? அல்லது இரண்டு கெட்டப்புகளில் தோன்றுகிறாரா? என்ற கேள்விக்கு விடை படம் வெளிவந்த பின்னர்தான் தெரியவரும்.


மேலும் இந்த படத்தில் சமந்தா, எமிஜாக்சன், ராதிகா என மூன்று முன்னணி நடிகைகள் நடித்திருந்தும் அவர்களுடை காட்சிகள் ஒன்றுகூட டீசரில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்த டீசர் அல்லது டிரைலரில் இவர்கள் இடம்பெற வாய்ப்பு உள்ளது. மொத்தத்தில் விஜய் ரசிகர்களுக்கு ஒரு ஆக்சன் விருந்து வரும் தமிழ்ப்ப்புத்தாண்டு தினத்தில் காத்திருக்கின்றது என்பது மட்டும் இந்த டீசரின் மூலம் உறுதியாக தெரிய வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.